Thursday, July 13, 2006

மும்தாஜின் தமிழ் ஆர்வம்

வாசிங்டன். வெள்ளி காலை, 10.30 மணி இருக்கும். எனது செல்பேசியில் ஓர் கவர்ச்சிகரமான குரல், வணக்கம், பேராசிரியர் ஞான சம்மந்தன் இருக்கிறா? என்று. நான் உடனே, அய்யா இருக்கிறார் தாங்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாமா? என்றேன். அந்த குரல், உடனே நான் பேராசிரியர் நண்பர் மும்தாஜ் என்றது.ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை. எனது செல்பேசி எண் எனக்கு பிடித்த மும்தாஜ்க்கு எப்படி கிடைத்து என்று.

நான் சுதாரித்துக் கொண்டு மேடம் வணக்கம். உங்களுடனும் உரையாடுவது மிக்க மகிழ்ச்சி என்றேன். அவரிடம் மேற்கொண்டு என்ன பேசுவது யோசிப்பதற்கு முன் நீங்கள் நிறைய கலைச்சேவை செய்து பல துட்டுகளை குவிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு, பேராசிரியிடம் தொலைப்பேசியை கொடுத்துவிட்டேன். அன்று முழுவதும் கிட்டதட்ட 3 முறை பேசிவிட்டார். அவர் ஏன் பேராசிரியரை கூப்பிட வேண்டும்? அவர் ஏன் என்னை கூப்பிடவில்லை?

வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவைக்கு தமிழ் நாட்டில் இருந்து கலைஞர்கள், அரசியல்வாதிகள், பேச்சாளர்கள் வருவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தமிழ் பேராசிரியர் கலைமாமணி முனைவர் ஞான சம்மந்தன் வந்து இருந்தார்கள். நியூயார்க் விழா முடிந்து அவரை வாசிங்டன் அழைத்து வந்தேன். உட்கார்க.

தமிழ் அறிஞர் தொ பரமசிவம் பற்றி நீங்கள் பலர் அறிந்து இருப்பீர்கள். அறியாமல் இருப்பது உங்களுக்கு நல்லது. அவர் தமிழ்ப் பேராசிரியராக மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் வேலைப் பார்த்து வருகிறார். சிறந்த தமிழ் அறிஞர், திராவிட கருத்துகள், மொழி மற்றும் வைணவமும் பற்றி ஆழ்ந்த அறிவு உடையவர். அவர் ஞானசம்மந்தனின் நண்பர் மற்றும் ஆலோசகர். அவரைத்தான் மும்தாஜ்க்கு பிடித்திருக்கிறதாம்.

போராசிரியர் ஞானசம்மந்தனும், போராசிரியர் தொ பரமசிவனும் மும்தாஜ்க்கு நண்பர்கள். இலக்கிய சம்மந்தமாக ஏற்படும் சந்தேகமும், தமிழ் சம்மந்தமாக பல விசயங்களை விவாதிப்பதும் மும்தாஜ்க்கு பழக்கமாம். போன வாரம் பேராசிரியர் தொ பரமசிவனுக்கு நெஞ்சு வலி வந்துள்ளது. எப்படி என்று கேட்டுவிடாதீர்கள். இதனை ஞானசம்மந்தன் வீட்டார்கள் இங்கே தெரிவித்தார்கள். மேலும் அவர்கள் மும்தாஜ்க்கு தெரிவித்து உள்ளார்கள். மருத்துவ மனைக்கு செல்லவும் மருத்துவ ஆலோசனைகளை பெறவும் மறுக்குகிறாராம். மும்தாஜ் அக்கறையோடு ஞான சம்மந்தனை அழைத்து இதனை எப்படி சமாளிப்பது என்றும், நான் வேண்டுமானால் திருநெல்வேலியோ, அல்லது மதுரை சென்று அவரை பார்த்து உதவ வேண்டுமா? என்று மும்தாஜ் கேட்டதை பக்கத்தில் இருந்து நான் தெரிந்து கொண்டேன்.

தமிழ் திரை உலகின், கலைத் தாயின் கவர்ச்சி கன்னி மும்தாஜ் ஓர் தமிழ் பேராசிரியர் படும் துன்பம் கண்டு அதனை எப்படி சமாளிப்பது என்று கேட்டதை நான் ஓர் பெரிய விசயமாக நினைக்கிறேன். தமிழ் மொழிப்பற்றி, தமிழ் ஆராய்ச்சிப் பற்றி, வைணவம் பற்றி, இன்னும் பல கருத்துகளை பேராசிரியர் தொ ப விடம் கலந்து உரையாடியது மும்தாஜின் மற்றோரு முகம் தெரிகிறது. இதுவும் அதே போன்ற பெரிய முகம்தான். அதாவது யார் துன்பப்பட்டாலும் உதவுவது மனித நேயம் என்றாலும் மும்தாஜ் அந்த தமிழ் பேராசிரியாருக்கு ஏதுவும் ஆகி விட கூடாது என்கிற அக்கறையோடு உதவ நினைத்தது நிச்சயம் பாராட்டுக்கு உரிய செயல். பேராசாரியர் ஞான சம்மந்தனிடம் பட்ஜெட் பத்மநாபன் ஆரம்பித்து ஜெர்ரி வரை தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டாராம். மொத்ததில் மும்தாஜ் பழக மிக இனிமையான பெண் என்றார் பேராசிரியார். எது எப்படியோ மும்தாஜின் தமிழ் ஆர்வம் எனக்கு மிகுந்த மன மகிழ்ச்சியை தருகிறது.





மும்தாஜின் மனித நேயத்திற்கு ஒரு பெரிய கும்பிடு! மெய்யாலுமே பெரிய மனசுதான்! பகிர்ந்ததற்கு நன்றி!

படிக்க மிகவும் மகிழ்ச்சியாகவும், மும்தாஜ் ரசிகன் என்ற முறையில் பெருமையாகவும் இருந்தது. நன்றி!

மும்தாஜின் இந்த நற்பண்பும் அக்கறையும் பாராட்டி எழுதி உள்ளீர்கள். ஆனால் இந்த நற்பண்புகள் அனைத்து துறையினரிடமும் உள்ளதே. ஏன் இதற்கு மட்டும் ஒவர் ரியாக்ஷன்?

அதிலும் பராட்டப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், சில நடிகைகள் இப்படி உதவி செய்துவிட்டு ஊடகங்கள் மூலம் விளம்பரம் தேடிக்கொள்வார்கள். ஆனால் மும்தாஜ் அவர்கள் எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் காதோடு காது வைத்தது போல் செய்யும் இத்தகைய செயல்கள் மிகவும் மெச்சத்தக்கது.

சிறந்த, அவசியமான பதிவு. மும்தாஜின் தமிழ் பற்றும் ஆர்வமும் தான் உலக அறிந்த விசயம் ஆயிற்றே.

உண்மையான தமிழ் ஆர்வம் கொண்டிருக்கும் வேறு சில நடிகைகள் யாராவது சொல்லுங்கள். மேலும் அவர் அமெரிக்கா தொலைபேசியில் கூப்பிட்டு எப்படி அவர்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டது உங்களுக்கு பெரிய விசயமாக தெரியவில்லையா? நல்லவற்றை பாராட்டலாம் அல்லவா? அதற்கு நடிகன், கலைஞன் போன்ற பேதம் இல்லையே. மேலும், மும்தாஜ் ஒரு கனவுக்கன்னி என்பதால் கூடுதல் கவணம். அவ்வளவே.

மும்தாஜிடம் பேசியது ஓர் பில்டப்பா? அப்படியே வைத்து கொள்ளுங்கள், இதில் மகிழ்ச்சி அடைவதில் தவறு ஏதும் இல்லேயே! மும்தாஜ் என்னுடைய செல் பேசியில் கூப்பிட்டது மனதிற்கு நிச்சயம் மகிழ்சியை தருகிறது. மும்தாஜ் நிறைய உதவிகள் செய்து வந்தாலும் இது நான் நேரிடையாக பார்த்தது. அதனை பதிய வைத்தேன்.

ஆமாம்..ஒரு நெருங்கிய நண்பருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் இன்னொருவரிடம் கலந்தாலோசிப்பது சகஜம் தானே.. இதில் தமிழார்வம் எங்க வந்தது? இதுவே நான் TNEB யில் வேலை பார்க்கிற ஒருத்தருக்கு உதவினால் அது மின்னார்வம் ஆகுமா? Bank-ல வேலை பார்க்கிறவருக்கு உதவினால் அது வங்கியார்வம் ஆகுமா? புரியலையே.. அப்புறம் தமிழ்ப் பேராசிரியரிடம் தமிழ் பேசாமல் இந்தியா பேசுவாங்க? இதுலயும் எங்கேயும் தமிழார்வம்? தெரியலையே.. அவங்க தொழிலுக்குத் தேவைப்படுது.. பேசுறாங்க.. எதுக்கு இப்படி ஓவரா உணர்ச்சிவசப் படுறீங்க?

ஒரு பெரிய நடிகை தமிழ் அறிஞர்களிடம் நெருக்கமாக இருப்பதே பாராட்டப்பட வேண்டிய செய்தி. அதிலும் ஒருவர் உடல்நலம் குன்றி சரியாக மருத்துவம் பார்த்துக்கொள்ள மாட்டேன் என்று சொல்லும் போது அவர்களின் இன்னொரு நண்பரை தொடர்பு கொண்டு எப்படி இவரை மருத்துவம் பார்த்துக்கொள்ள வைப்பது என்று ஆலோசிக்கிறார். இதை பகிர்ந்துகொள்ளாமல் விட்டிருந்தால் தான் தவறு.

உங்கள் கட்டுரை படித்தவுடன் என் இதயத்தில் மும்தாஜ் ஒரு படி மேலே சென்று விட்டார்.

உங்கள் கருத்தில் சிறுபிள்ளைத்தனமும் மும்தாஜ் மேல் உள்ள வெறுப்பும் தான் தெரிகிறது. பரமசிவம் மும்தாஜின் நண்பராம். அதனால் உதவி செய்தாராம். பரமசிவம் மும்தாஜ்க்கு எப்படி நண்பரானார்? மும்தாஜின் தமிழார்வமும் தமிழறிஞர்களை மதிக்கும் குணமும் தேடலும் அவர்களை நண்பர்களாக்கியதே தவிர வேறென்ன? அப்படிப்பட்ட தேடலும் மொழியறிவும் இங்கு வேறு யாருக்கு உண்டு? மும்தாஜிடம் இருப்பதில் ஒரு தூசி கூட கிடையாது.

மும்தாஜ் இதை காட்டிலும் பெரிய விஷயங்கள் பண்ணி இருப்பதை என்னுடைய பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளேன். நான் இதை குறை கூறும் நோக்கத்தோடு அல்லது நக்கல் பண்ணும் நோக்கத்தோடு எழுதவில்லை. ஆனால் ஒரு பிரபலத்தோடு நேரில் விஷயம் ஒரு சகபதிவரை சற்றே தடுமாற வைத்து விட்டதோ என்று எண்ணத்தில் தான் "ஒவர் ரியாக்ஷன்" என்று நான் பயன்படுத்தினேன். எந்த காழ்ப்புணர்வும் இல்லை. மீண்டும் சொல்கிறேன். தவறாக பட்டால் தயவு செய்து மன்னித்து விடுங்கள்.

நல்ல பதிவு. சில நடிகைகளுக்கு 'ஆன்மீகத்' தாகமெடுத்து மலையேறுவதும், முக்கியமாக மருதமலை. மதிப்பிற்குரியதாகவும், வலைப்பதிவில் பகிர்ந்து கொள்ளக்கூடிய தகுதியோடும் இருக்கும்போது, மும்தாஜ்க்கு தமிழ்த் தாகமெடுப்பதும் அதனை யாரால் போக்கிக் கொள்கிறாரோஅந்த அறிவாளி உடல்நலம் குன்றும்போது அக்கறைப்படுவதும் ஏன் மதிப்பிற்குரியதாகவோ, பகிர்ந்து கொள்ளக் கூடியதாகவோ இருக்கக் கூடாது? எனக்கும் மும்தாஜ் தொலைபேசி எண்ணை கொடுத்துவிடுங்கள்.

Wednesday, July 12, 2006

திரும்பவும் மூளை

முதலில் என்னை புரிந்து கொண்டு பாராட்டியவர்களுக்கு நான் நன்றி சொல்ல கடைமைப்பட்டுள்ளேன். சொல்ல வந்த விதம் சரியானது என்றாலும் தலைப்பு சரியில்லை என்று சொன்னார்கள். சுட்டிக்காட்டிய நண்பர்கள் முக்கியமாக மூர்த்தி, பாலசந்தர் கணேசன், நாகை சிவா ஆகியவர்களுக்கு எனது மனமார்ந்து நன்றிகள் பல. நண்பர் சீனுவுக்கு ஒரு வார்த்தை. மற்றவர்கள் செய்ததைத்தான் நான் செய்தேன் என்பது எல்லோருக்கும் தெரியும். மற்றவர்கள் சம்பந்தமில்லாமல் செய்தார்கள். எனது பதிவில் சம்பந்தம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

மூளை நிறைய இருக்கும் அமீரகத்து பொடியன் தெரிந்தே உளறியிருக்கிறார். வெளியான படத்தின் பெட்டியை பிடுங்கிவிட்டது போல நின்று எழுதியிருக்கிறார். இப்போது அமீரகத்து ஆசாமியின் ஜாதி என்ன என்பது எல்லோருக்கும் தெரிய வந்துவிட்டது. எத்தனை மரத்தை வெட்டி சாய்த்தார்களோ? நடுநடுவே வந்து உளறும் தி. ராஸ்கோலுவை கேட்டால் சொல்வாரா? தமிழனின் நலனுக்காக இந்த தி.ராஸ்கோலு என்னதான் செய்திருக்கிறார்? குறைந்த பட்சம் திருச்சி ஓட்டலில் தங்கர் பச்சான் என்ன செய்தார் என்பதையாவது தெரிந்து வைத்திருக்கிறாரா? நண்பர் வசந்தனின் வாதம் விஷமத்தனமானது. பிரச்சினைக்குரிய பதிவிலும் அதை பற்றி எங்கும் சொல்லாத வசந்தன் இங்கே பொங்கி எழுந்திருப்பதற்கு காரணம் தான் ஒரு இலங்கையை சேர்ந்த தமிழன் என்பதால்தான். ஆனால் தமிழகத்தை சேர்ந்த தமிழர்கள் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள் என்று நான் எதிர்பார்த்தது அப்படியே நடந்திருக்கிறது. ஆகவே தற்போதைய தலைப்பு பொருத்தமாகத்தான் இருக்கும்.

நான் ரஜினி செய்வதையெல்லாம் நியாயப்படுத்த முடியாது. அதற்கு நிறைய ஆசாமிகள் இருப்பார்கள். தனக்கென்று ஒரு ஜால்ரா கூட்டத்தை உருவாக்கவும் ரஜினிக்கு அவசியம் இல்லை. சபேசன் போன்றவர்கள் மிரட்டத்தேவையில்லை. என்னால் ரஜினிக்கோ ரஜினி ரசிகர்களுக்கோ பிரச்சினை என்றால் மன்னிப்பு கேட்க நான் தயார். நண்பர் ரஜினி ராம்கி இந்த பதிவை படிப்பார் என்று நினைக்கிறேன். பிரச்சினையை எதிர்த்து சமாளிக்காமல் ரஜினி போலவே நழுவி செல்வதை ரஜினி ராம்கியின் பெரிய குறையாக நான் பார்க்கிறேன். இதை சொல்வதால் அவர் நிச்சயம் தப்பாக எடுத்துக்கொள்ளமாட்டார் என்பதும் எனக்கு தெரியும். சவாலை நேரிடையாக சந்திக்க முடியாமல் சபேசன் போன்ற ஜால்ரா ஆசாமிகள் மிரட்ட ஆரம்பிப்பார்கள் என்பதை நான் முன்பே எதிர்பார்த்ததுதான். ரஜினியின் ரசிகர்களே மிரண்டு போய்விடாதீர்கள். நிமிர்ந்து நில்லுங்கள். இதுவரை ரஜினி என்ன பெரிய தவறை செய்துவிட்டார்? ஏகப்பட்ட ஊழல் செய்து, இன்னும் சுரண்டிக் கொண்டிருக்கும் நிறைய தமிழர்கள் இங்கே இருக்கும்போது. என்னால் ரஜினியின் நடிப்பை விமர்சிக்க முடியும். ரஜினியின் நடிப்பு பிடிக்காது. அதற்காக ரஜினி என்கிற மனிதரை அரசியல் ரீதியாகவே அணுகுவதை தவறான விஷயமாக நினைக்கிறேன். எல்லாரிடமும் ஏதாவதொரு திறமை இருக்கத்தான் செய்கிறது. என்னை ரஜினி ரசிகனாக பார்க்காமல் நான் சொல்வதை மட்டும் சரியாக இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள்.

பெங்களூரில் வள்ளுவர் சிலை வேண்டும் என்று கோஷம் போடுகிறார்கள். அய்யா, முதலில் உங்கள் வீட்டில் வள்ளூவர் பொம்மையாவது வைத்திருக்கிறீர்களா? காவிரி பிரச்சினையில் பெங்களூர் தமிழர்களை காப்பாற்றியதே ரஜினிதான் என்பது உன்னைப்போன்ற பொடியன்களுக்கு தெரியாது. அதற்கு 15 ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வுகள் உங்களுக்கு தெரிந்தாகவேண்டும். அப்போது உங்களுக்கு ஆறு வயதுதான் இருக்கும். நதி நீர் இணைப்புக்கு நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் அல்லது செய்யப்போகிறீர்கள் என்பதை கொஞ்சம் சொல்லமுடியுமா? ரஜினி ரசிகர்களை விட தமிழ்நாட்டில் நதி நீர் இணைப்பு வேறு யார்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதையாவது சொல்ல முடியுமா? ஜெயலலிதாவை தைரிய லட்சுமி என்று சொன்னதில் என்ன தவறு இருக்கிறது. அப்படி சொல்லாமல் இருந்திருந்தால்தான் அது தவறு. ஜெயலலிதா என்கிற ஒரு பாப்பாத்தியின் தைரியத்தை உங்களால் செரிக்க முடியவில்லை என்பதைத்தான் இது எடுத்துக்காட்டுகிறது. இது போல வெட்டியாக பேசுவதை விட்டுவிட்டு ஆரோக்கியமாக எதையாவது பேசுங்கள். முதலில் தமிழ் உணர்வு என்றால் என்ன என்பதை தெளிவாக சொல்லுங்கள். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் முந்தா நாள் வரை எனக்கு தமிழர்கள் என்கிற வார்த்தையின் மீது எனக்கு ஒரு வித கவர்ச்சி இருந்தது. அந்த மயக்கத்தை போக்கி வெளிச்சத்தை காட்டிய பொடியன்களுக்கு நான் நன்றி சொல்லவேண்டும்.

Tuesday, July 11, 2006

தமிழர்களுக்கு மூளை இருக்கிறதா?

உள்ளூரில் நிறைய தமிழர்கள் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் பிழைப்புக்காக ஊர் விட்டு ஊர் வந்துவிட்டு எங்கே இலங்கை தமிழர்கள் கோபம் கொள்ளக்கூடாது என்பதற்காக சிங்சாக் என்று ஜால்ரா தட்டும் மூளையுள்ள ஒரு அமீரகத்து பொடியனால் வந்திருக்கிறது ஒரு பிரச்னை. இதில் திராவிட ராஸ்கோலு என்கிற பெயரில் எவரோ விளையாடுகிறார்கள். இதற்கும் திராவிட தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டுள்ளேன். இதுவரை பதில் வரவில்லை. நான் திராவிடக் கொள்கையில் பற்றுக்கொண்டிருப்பவன்தான். அதற்கும் ரஜினிகாந்துக்கும் என்ன சம்பந்தம் என்பது தெரியவில்லை.
ஏகப்பட்ட ஆண்டுகள் நிலுவையில் இருக்கும் ஒரு காவிரி பிரச்சினையை ஒரே நாளில் தீர்க்கவேண்டும் என்று கோதாவில் குதித்தார் பாரதிராஜா. மக்கள் சக்தி படைத்த பெரிய அரசியல்வாதிகளாலே தீர்க்கமுடியாத பிரச்சினையை நம்மைப்போல சினிமாக்காரர்கள் தீர்க்க முடியாது என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தார் ரஜினி. ஆனால் எந்த முட்டாளும் கேட்கவில்லை. பத்திரிக்கைகள் தங்களது விற்பனையை பெருக்கிக்கொண்டன. எல்லோருக்கும் தமிழ் உணர்வு என்கிற பெயரில் மக்களை உரசிப்பார்த்து மோதவிட்டு பார்த்தால் போதும் என்று நினைத்தார்கள். ரஜினியை வில்லனாக்கி தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப்போட்டுக்கொண்டார்கள். தற்போது தங்கர் பச்சான் மூலம் இன்னொரு வியாபாரத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். அமீரகத்தில் பைசாவை எண்ணி வங்கியில் போட்டுவிட்டு நீலிக்கண்ணீர் வடிக்கும் பொடியன்கள் வெற்று விளம்பரத்துக்காக இந்த பிரச்னையை கையில் எடுத்திருக்கிறார்கள்.

இலங்கை பிரச்னைக்காக குரல் கொடுத்தவர்களுக்கு மூளை இருக்கிறதாம். குரல் கொடுக்காமல் அமைதியாக இருந்தால் அவர்களுக்கு மூளை இல்லையாம். என்னப்பா இது கொடுமை? நடப்பதை அமைதியாக பார்த்துக்கொண்டு இருக்குபவர்கள் இதை அவசியம் கவனிக்க வேண்டும். இவர்கள் பிரச்சினையின் அடிப்படையை புரிந்துதான் பேசுகிறார்களா அல்லது நடுவே புகுந்து இலவசமாக விளம்பரம் தேடுகிறார்களா என்று சந்தேகப்பட வேண்டியிருக்கிறது. எதற்கு எடுத்தாலும் சினிமாவில் கொண்டு வந்து நிறுத்திவிடுகிறார்கள். சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு சாதனம் என்பது சம்பந்தப்பட்ட இவர்களுக்கு நன்றாகவே தெரியும். ரஜினியை திட்டினால் நல்ல விளம்பரம் கிடைக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். புகழ் வாய்ந்த நடிகரான கமலஹாசனை எதற்கு திட்டுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை. கமலஹாசன் சொன்னால் அவரை பின்பற்றுவதற்கு ரசிகர்கள் கூட்டம் இல்லை என்பது உண்மைதான். ஆனால் கமலஹாசன் எப்போதுமே பொது பிரச்சினைகளில் கருத்து சொன்னது கிடையாது. சமீபத்தில் நடந்த தனது சொந்தக்காரரான சுகாசினி சம்பந்தப்பட்டவற்றில் கூட தன்னுடைய கருத்தை சொல்லவில்லை. இப்போது கருத்து சொல்ல வேண்டும் என்று சொன்னால் கற்பு விவகாரத்தை விட இலங்கை பிரச்னை முக்கியமானது என்று அர்த்தம். அப்படியென்றால் இவ்வளவு முக்கியமான விவகாரத்தை விட்டுவிட்டு திருமாவளவன் போன்றவர்கள் கற்பு விவகாரத்தில் கரடியாய் கத்திக்கொண்டிருந்தது வீண் என்று சொல்வதாய் முடியும். இப்படியே பிரச்சினை போனால் அது விதாண்டவாதம்தான்.

பொட்டீக்கடை என்று ஒருத்தர் எழுதுவதை பார்க்க சகிக்கவில்லை. தனது இனத்தை சேர்ந்தவர் என்கிற ஒரே காரணத்திற்காக தங்கர்பச்சானை ஆதரிக்கிறாராம். இதில் மயிர் மயிர் என்று ஆங்காங்கே எழுதுகிறார். http://kilumathur.blogspot.com/2006/07/blog-post_10.html#comments. இலங்கை பிரச்சினையில் மற்ற அரசியல்வாதிகள் குரல் கொடுக்கவில்லை. பதிவு எழுதியவரே பெரிதாக இந்த விஷயத்தில் என்ன செய்திருக்கிறார் என்றுதான் கேட்டேன். பொட்டீக்கடை அடிக்கடி சொல்லுவதை பிடுங்கிக்கொண்டிருந்தாரோ என்றுதான் கேட்டேன். அதை வெளியிடாமல் தடை செய்துவிட்டார்கள். நல்ல வேடிக்கை. உடனே ரஜினி ரசிகர்கள் எல்லோரும் அப்படித்தான் என்று குதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி. நான் ரஜினியின் ரசிகன் அல்ல. கமலஹாசனின் ரசிகன். எனக்கு விஜயகாந்தின் அரசியல் பிரவேசமும் பிடிக்கும். ரஜினியை விட ரஜினி ரசிகர்களை பிடிக்கும். நான் பார்த்தவரை கட் அவுட், பால் அபிஷேகம் தவிர வேறு எந்த பிரச்சினையும் செய்வதில்லை. எல்லாவற்றிற்கும் பொறுமையாக அவர்கள் நடந்து கொள்ளும் விதம் பிடித்திருக்கிறது என்பதையும் வெளிப்படையாக ஒப்புக்கொள்வேன். சரி கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லிவிடுகிறேன்.

ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாட்டை சேர்ந்த தமிழர்கள் இதுவரை என்ன செய்திருக்கிறார்கள்? போராட்டம் என்கிற பெயரில் கடையை அடைத்துவிட்டு வீட்டில் உட்கார்ந்ததோடு சரி. நான் படிக்கிற காலத்தில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி ஊர்வலமாய் நடந்து சினிமா கொட்டகை வரை போனோம். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு கொடுப்பதாக சொன்னால் இங்கே இருப்பவர்கள் ஓட்டுப்போடுவார்கள் என்று நினைத்து எல்லா அரசியல் கட்சிகளும் ஆட்டம் போட்டன. இவர்களை நம்பி விடுதலை புலிகள் போன்ற போராளி அமைப்புகளும் ஏமாந்து போயின. பத்மநாபா அநியாயாமாக உயிரை விட்டார். அவர் இலங்கையிலேயே இருந்திருந்தால் இன்னும் உயிரோடு இருந்திருப்பார் என்று ஒரு நண்பர் சொன்னார். நல்லது நடக்கும் என்றுதான் புலிகள் பேச்சு வார்த்தைக்கு முன்வந்தார்கள். நம்பி கழுத்தறுத்தது இந்தியாவில் வாழும் தமிழர்கள்தான். ராஜீவ் கொலை என்பது அதற்கு பின்னர் நடந்ததுதான். வை.கோ, ராமதாசு, திருமாவளவன், தங்கர்பச்சான் போன்றவர்கள் விடுதலைப்புலிகளை ஆதரிப்பதாக சொல்லிவிட்டு பின்னர் தங்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் ஓடிவிடுவார்கள். ராமதாசு இதை பற்றி இப்போது பேசவே மறுக்கிறார். வை.கோ சிறைக்கு போய்வந்தபின்னர் வாயை திறக்கவில்லை. தேர்தல் நேரத்தில் திருமாவளவனும் இலங்கை பற்றி பேசவில்லை. இப்போது திடீரென்று பேசுவதற்கு என்ன காரணம் என்பதை இலங்கை தமிழர்கள்தான் புரிந்து கொள்ளவேண்டும். இடையே தங்கர் பச்சான் போன்ற ஆசாமிகளும் அமீரகத்தில் உட்கார்ந்து கொண்டு விளம்பரம் தேடிக்கொள்ளும் ஆசாமிகளையும் இலங்கை தமிழர்கள் இனியாவது நம்பாமல் இருப்பார்களா?

ஆரம்பிச்சுட்டாங்க! ஆரம்பிச்சுட்டாங்க! !

நான் தேர்தல் பிரசாரத்துக்கு வந்த போது, "இப்போது வேலுõர் கோட்டை, நாளை ஜார்ஜ் கோட்டை' என கூறியபடி, ஆட்சியில் என்னை மக்கள் அமர வைத்து விட்டனர். நன்றியுள்ளவர்கள் தமிழர்கள் என நினைக்க துõண்டிய விழா இது.

பெற்ற சுதந்திரத்தை ஜனநாயக முறைப்படி காப்பாற்ற வேண்டும். ஜனநாயகம் காப்பற்ற வேண்டும் என்பதால் தான் என்னை மீண்டும் மக்கள் தேர்ந்தெடுத்தனர்.

சரியான தலைமையில்லாததால் தான் சிப்பாய் புரட்சி தோல்வியடைந்தது என சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தில் இதுபோன்று புரட்சிகள் அதிகம் நடந்துள்ளது. ஆனால், துரோகிகள் இருப்பதால் தான் இதுபோன்ற புரட்சிகள் தோல்வியடைந்தன.

துரோகம் என்பது தமிழக சரித்திரத்தில் இன்று வரை நிரந்தர இடம் பிடித்துள்ளது. இதை அறிந்து தமிழகத்தை காப்பாற்றுபவர்களை மக்கள் அடையாளம் காண வேண்டும்.

வேலுõர் கோட்டையில் நடந்த முதல் சுதந்திர தாகமே இந்தியா முழுவதும் பரவி இந்திய சுதந்திரம் கிடைத்தது. புரட்சி நடந்த போது இந்திய சிப்பாய்கள், ஆங்கிலேய சிப்பாய்களின் குடும்ப பெண்களை மரியாதையாக நடத்தியுள்ளனர். இதில், இருந்து பண்பாடு காப்பதில் தமிழர்கள் சிறந்தவர்கள் என்பது தெரிகிறது.

காப்பாற்ற பட்ட சுதந்திரத்தை தற்போது நான் காப்பாற்றி வருகிறேன். இந்த சுதந்திரத்தை காப்பாற்ற இன்றைக்கும் அறப்போர் நடத்தி வருகிறேன்.

முதல்வர் கருணாநிதி.