தமிழர்களுக்கு மூளை இருக்கிறதா?
உள்ளூரில் நிறைய தமிழர்கள் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் பிழைப்புக்காக ஊர் விட்டு ஊர் வந்துவிட்டு எங்கே இலங்கை தமிழர்கள் கோபம் கொள்ளக்கூடாது என்பதற்காக சிங்சாக் என்று ஜால்ரா தட்டும் மூளையுள்ள ஒரு அமீரகத்து பொடியனால் வந்திருக்கிறது ஒரு பிரச்னை. இதில் திராவிட ராஸ்கோலு என்கிற பெயரில் எவரோ விளையாடுகிறார்கள். இதற்கும் திராவிட தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டுள்ளேன். இதுவரை பதில் வரவில்லை. நான் திராவிடக் கொள்கையில் பற்றுக்கொண்டிருப்பவன்தான். அதற்கும் ரஜினிகாந்துக்கும் என்ன சம்பந்தம் என்பது தெரியவில்லை.
ஏகப்பட்ட ஆண்டுகள் நிலுவையில் இருக்கும் ஒரு காவிரி பிரச்சினையை ஒரே நாளில் தீர்க்கவேண்டும் என்று கோதாவில் குதித்தார் பாரதிராஜா. மக்கள் சக்தி படைத்த பெரிய அரசியல்வாதிகளாலே தீர்க்கமுடியாத பிரச்சினையை நம்மைப்போல சினிமாக்காரர்கள் தீர்க்க முடியாது என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தார் ரஜினி. ஆனால் எந்த முட்டாளும் கேட்கவில்லை. பத்திரிக்கைகள் தங்களது விற்பனையை பெருக்கிக்கொண்டன. எல்லோருக்கும் தமிழ் உணர்வு என்கிற பெயரில் மக்களை உரசிப்பார்த்து மோதவிட்டு பார்த்தால் போதும் என்று நினைத்தார்கள். ரஜினியை வில்லனாக்கி தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப்போட்டுக்கொண்டார்கள். தற்போது தங்கர் பச்சான் மூலம் இன்னொரு வியாபாரத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். அமீரகத்தில் பைசாவை எண்ணி வங்கியில் போட்டுவிட்டு நீலிக்கண்ணீர் வடிக்கும் பொடியன்கள் வெற்று விளம்பரத்துக்காக இந்த பிரச்னையை கையில் எடுத்திருக்கிறார்கள்.
இலங்கை பிரச்னைக்காக குரல் கொடுத்தவர்களுக்கு மூளை இருக்கிறதாம். குரல் கொடுக்காமல் அமைதியாக இருந்தால் அவர்களுக்கு மூளை இல்லையாம். என்னப்பா இது கொடுமை? நடப்பதை அமைதியாக பார்த்துக்கொண்டு இருக்குபவர்கள் இதை அவசியம் கவனிக்க வேண்டும். இவர்கள் பிரச்சினையின் அடிப்படையை புரிந்துதான் பேசுகிறார்களா அல்லது நடுவே புகுந்து இலவசமாக விளம்பரம் தேடுகிறார்களா என்று சந்தேகப்பட வேண்டியிருக்கிறது. எதற்கு எடுத்தாலும் சினிமாவில் கொண்டு வந்து நிறுத்திவிடுகிறார்கள். சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு சாதனம் என்பது சம்பந்தப்பட்ட இவர்களுக்கு நன்றாகவே தெரியும். ரஜினியை திட்டினால் நல்ல விளம்பரம் கிடைக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். புகழ் வாய்ந்த நடிகரான கமலஹாசனை எதற்கு திட்டுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை. கமலஹாசன் சொன்னால் அவரை பின்பற்றுவதற்கு ரசிகர்கள் கூட்டம் இல்லை என்பது உண்மைதான். ஆனால் கமலஹாசன் எப்போதுமே பொது பிரச்சினைகளில் கருத்து சொன்னது கிடையாது. சமீபத்தில் நடந்த தனது சொந்தக்காரரான சுகாசினி சம்பந்தப்பட்டவற்றில் கூட தன்னுடைய கருத்தை சொல்லவில்லை. இப்போது கருத்து சொல்ல வேண்டும் என்று சொன்னால் கற்பு விவகாரத்தை விட இலங்கை பிரச்னை முக்கியமானது என்று அர்த்தம். அப்படியென்றால் இவ்வளவு முக்கியமான விவகாரத்தை விட்டுவிட்டு திருமாவளவன் போன்றவர்கள் கற்பு விவகாரத்தில் கரடியாய் கத்திக்கொண்டிருந்தது வீண் என்று சொல்வதாய் முடியும். இப்படியே பிரச்சினை போனால் அது விதாண்டவாதம்தான்.
பொட்டீக்கடை என்று ஒருத்தர் எழுதுவதை பார்க்க சகிக்கவில்லை. தனது இனத்தை சேர்ந்தவர் என்கிற ஒரே காரணத்திற்காக தங்கர்பச்சானை ஆதரிக்கிறாராம். இதில் மயிர் மயிர் என்று ஆங்காங்கே எழுதுகிறார். http://kilumathur.blogspot.com/2006/07/blog-post_10.html#comments. இலங்கை பிரச்சினையில் மற்ற அரசியல்வாதிகள் குரல் கொடுக்கவில்லை. பதிவு எழுதியவரே பெரிதாக இந்த விஷயத்தில் என்ன செய்திருக்கிறார் என்றுதான் கேட்டேன். பொட்டீக்கடை அடிக்கடி சொல்லுவதை பிடுங்கிக்கொண்டிருந்தாரோ என்றுதான் கேட்டேன். அதை வெளியிடாமல் தடை செய்துவிட்டார்கள். நல்ல வேடிக்கை. உடனே ரஜினி ரசிகர்கள் எல்லோரும் அப்படித்தான் என்று குதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி. நான் ரஜினியின் ரசிகன் அல்ல. கமலஹாசனின் ரசிகன். எனக்கு விஜயகாந்தின் அரசியல் பிரவேசமும் பிடிக்கும். ரஜினியை விட ரஜினி ரசிகர்களை பிடிக்கும். நான் பார்த்தவரை கட் அவுட், பால் அபிஷேகம் தவிர வேறு எந்த பிரச்சினையும் செய்வதில்லை. எல்லாவற்றிற்கும் பொறுமையாக அவர்கள் நடந்து கொள்ளும் விதம் பிடித்திருக்கிறது என்பதையும் வெளிப்படையாக ஒப்புக்கொள்வேன். சரி கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லிவிடுகிறேன்.
ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாட்டை சேர்ந்த தமிழர்கள் இதுவரை என்ன செய்திருக்கிறார்கள்? போராட்டம் என்கிற பெயரில் கடையை அடைத்துவிட்டு வீட்டில் உட்கார்ந்ததோடு சரி. நான் படிக்கிற காலத்தில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி ஊர்வலமாய் நடந்து சினிமா கொட்டகை வரை போனோம். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு கொடுப்பதாக சொன்னால் இங்கே இருப்பவர்கள் ஓட்டுப்போடுவார்கள் என்று நினைத்து எல்லா அரசியல் கட்சிகளும் ஆட்டம் போட்டன. இவர்களை நம்பி விடுதலை புலிகள் போன்ற போராளி அமைப்புகளும் ஏமாந்து போயின. பத்மநாபா அநியாயாமாக உயிரை விட்டார். அவர் இலங்கையிலேயே இருந்திருந்தால் இன்னும் உயிரோடு இருந்திருப்பார் என்று ஒரு நண்பர் சொன்னார். நல்லது நடக்கும் என்றுதான் புலிகள் பேச்சு வார்த்தைக்கு முன்வந்தார்கள். நம்பி கழுத்தறுத்தது இந்தியாவில் வாழும் தமிழர்கள்தான். ராஜீவ் கொலை என்பது அதற்கு பின்னர் நடந்ததுதான். வை.கோ, ராமதாசு, திருமாவளவன், தங்கர்பச்சான் போன்றவர்கள் விடுதலைப்புலிகளை ஆதரிப்பதாக சொல்லிவிட்டு பின்னர் தங்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் ஓடிவிடுவார்கள். ராமதாசு இதை பற்றி இப்போது பேசவே மறுக்கிறார். வை.கோ சிறைக்கு போய்வந்தபின்னர் வாயை திறக்கவில்லை. தேர்தல் நேரத்தில் திருமாவளவனும் இலங்கை பற்றி பேசவில்லை. இப்போது திடீரென்று பேசுவதற்கு என்ன காரணம் என்பதை இலங்கை தமிழர்கள்தான் புரிந்து கொள்ளவேண்டும். இடையே தங்கர் பச்சான் போன்ற ஆசாமிகளும் அமீரகத்தில் உட்கார்ந்து கொண்டு விளம்பரம் தேடிக்கொள்ளும் ஆசாமிகளையும் இலங்கை தமிழர்கள் இனியாவது நம்பாமல் இருப்பார்களா?
11 Comments:
உங்கள் கருத்தை முழுமையாக ஆமோதிக்கிறேன்.
திரு பாலமுருகன்(விடாக் கண்டன்) உங்களின் பின்னூட்டம் பதியப்படுகிறது
அன்புடன் அமீரக பொடியன்
மகேந்திரன்.பெ
தமிழணுடைய சகிப்பு தன்மையை இந்த பதிவு காட்டுகிறது....
பதிவைப் பற்றி நான் கருத்து சொல்லவிரும்பவில்லை. ஆனால், நீங்கள் கொடுத்திருக்கும் தலைப்பு நிச்சயம் விளம்பரத்திற்காகத்தான். (அதைப் பார்த்துத் தான் இந்தப் பதிவை படிக்கவேண்டியதாகப் போய்விட்டது). நீரே சொல்லுகிறபடி, உமக்கும் தங்கர் பச்சான்னுக்கும் பெரிய்ய்ய்ய்ய்ய வித்தியாசம் ஒன்றும் இல்லை. (இது பிரசுரமாகுமா?)
just look at this
http://kilumathur.blogspot.com/2006/06/blog-post_16.html
அன்பு நண்ப,
உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன். அனால் தலைப்பு கொஞ்சம் கடுமை என்பது என் தயவான அபிப்பிராயம்.
நட்புடன்
மூர்த்தி
அந்தப் பதிவு எழுதி அதுக்கு பின்னூட்டமிட்ட பொட்டி பொடியன்களையெல்லாம் யாருமே மனுசனா மதிக்கிறதில்ல. அவனுங்களுக்காக ஒரு பதிவே வேஸ்ட்.
பாலமுருகன்,
நாங்கள் தங்கர் பச்சானையும், விடுதலை சிறுத்தைகளையும் நம்புகிறோம் என்று இலங்கை தமிழர்கள் கூறினார்களா? அல்லது இவர்களை நாங்கள் நம்பவில்லை என்று தினசரி அவர்கள் அறிக்கை விட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?. இதையெல்லாம் பார்த்து கொண்டிருக்கிற சூழ்நிலையிலா அவர்கள் இருக்கிறார்கள்.
மற்றபடி எல்லா பிரச்சினைகளையும் நடிகர்கள் தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும் என்பது அபத்தம். அதிகாரம் என்பதை அரசியல் கட்சிகளிடம் கொடுத்து விட்டு ரஜினி ஏன் ஒண்ணும் செய்யவில்லை, நயனதாரா, திரிஷா ஏன் இதை பற்றி கவலை பட வில்லை என்று கேட்டு கொண்டிருப்பது , கவனத்தை திசை திருப்புகிறது. கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள் சொன்னால் செய்வதற்கு பலர் இருக்கிறார்கள். தங்கர் அவர்களை விட்டு விட்டு நடிகர்கள் இதையெல்லாம் ஏன் செய்யவில்லை என்று கேட்பது சரியாக படவில்லை.நடிகர்கள் நல்லது செய்தால் பாராட்டலாம். ஆனால் செய்யவில்ல என்று திட்ட முடியாது.
ஒரு நல்ல நியாயமான பதிவு. அநியாயமான, பொருந்தாத, தேவையில்லாத தலைப்பு மற்றும் வார்த்தைகள்.
Tamils, in general, are brainless. No need to divide here and there. Look at the state of the majority of us.
-kajan
//இலங்கை பிரச்னைக்காக குரல் கொடுத்தவர்களுக்கு மூளை இருக்கிறதாம். குரல் கொடுக்காமல் அமைதியாக இருந்தால் அவர்களுக்கு மூளை இல்லையாம். //
அதுவல்லவே பிரச்சினை.
இமயமலைக்குச் செல்வதாக தங்கர் சொன்னதற்காக தங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று இரசிகர்கள் சொன்னதல்லவா பிரச்சினை?
எனக்கு அல்லது உங்களுக்கு வாசித்துப் புரிந்துகொள்வதில் சிக்கலுள்ளதென்பது தெரிகிறது. யாருக்கு?
அதுசரி, ரஜனி காவிரிப் பிரச்சினையில் உண்ணாவிரதம் இருந்ததாகக் கேள்விப்பட்டோமே, உண்மையா? திரையுலகத்தினரால் எதுவும் சாதிக்க முடியாதென்பதை நன்கு தெரிந்தவரை, உண்ணாவிரதமிருந்ததாக ஈழத்தமிழருக்குப் பொய் சொல்லியுள்ளன சில விசமப்பத்திரிகைகள் என்றுதான் இவ்வளவு நாளும் நினைத்துக்கொண்டுள்ளேன்.
___________________
ஈழத்தமிழரைப் பற்றிச் சொல்லவேண்டுமானால், பொதுவாகப் பார்த்தால் கலைஞரையே நம்பாதவர்கள் அவர்கள். இன்றைய நிலையில் அகதிகள் பிரச்சினையில் நியாயமான நிலைப்பாடும், இலங்கைக்கு இந்தியா உதவி செய்வதைத் தடுப்பதற்கான அழுத்தத்தைக் கொடுப்பதுமே தமிழகத்திலிருந்து கிடைத்தால் போதுமானதென்பது பொதுவான ஈழத்தமிழ்க் கருத்தென்று நினைக்கிறேன்.
என்வரையில் அதுவே போதுமானது. மிகுதி அரசியலை எமது பலமே தீர்மானித்துக் கொள்ளும்.
மூளையுள்ளதா இல்லையா என்று கண்டுபிடிக்க இறுதியாக ஒரு வசனம் சொல்லியுள்ளீர்கள். ஈழத்தமிழரென்று ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் பல முடிவுகள் கிடைக்கும். ஆனால் தலைமையை எடுத்தால் அவர்கள் சரியானவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார்களென்பது வரலாற்றில் தெரியும். திருமா சொல்வதற்கும் ராமதாஸ் சொல்வதற்குமிடையில் நிச்சயம் வேறுபாட்டை உணர்வார்கள். நெடுமாறன் சொல்வதற்கும் வீரமணி சொல்வதற்குமிடையிலும் வேறுபாட்டை உணர்வார்கள். தங்கர், அறிவுமதி, பாரதிராஜா போன்றவர்கள் சொல்வதற்கும் விஜயகாந் சொல்வதற்குமிடையிலும் வித்தியாசததைக் கண்டுகொள்வார்கள்.
இன்றைய நிலையில் ரஜனி ஒரு கருத்தைச் சொன்னாற்கூட அதை நம்பி தமக்கு மூளையில்லையென்பதை நிரூபிக்க மாட்டார்கள். நானும் தான்.
விடாக் கண்டன் பாலமுருகன்!
முதலில் தலைப்பை மாற்றுங்கள். அடுத்தவர்களின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.
தங்கர்பச்சான் ஒரு விளம்பரத்துக்கு அப்படி பேட்டி அளித்து உள்ளார். அந்த பேட்டியில் பிரச்சனையே அவர் இமயமலையை பற்றி கூறியது தான். அதைக் கேட்டால் ரஜினி ரசிகர்களுக்கு மூளை இல்லை என்று சொல்கின்றார்கள். மகேந்திரனும் ஒரு நோக்கத்துடன் தான் அப்படி ஒரு தலைப்பை வைத்து உள்ளார். அது என்னவென்று அனைவருக்கும் தெரியும்.
அரசியல்வாதிகளை விட சினிமா கலைஞர்கள் ஒன்றும் வலிமையானவர்களோ, மக்களிடம் எழுர்ச்சியை ஏற்படுத்த கூடியவர்களோ கிடையாது.
வை.கோ. இன்றளவும் கூட ஈழத் தமிழர்கள் பிரச்சனைக்கு விடாமல் குரல் கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றார்.
Post a Comment
<< Home