'அம்மா பையன்'
பேராசிரியர் சந்திரசேகர் லுமும்பாப் பலகலைக் கழகத்தில் படிக்கும் போது சகமாணவியான வியட்நாமியப் பெண்ணான கிம்முடன் ஏற்பட்ட காதலின் விளைவாகப் பிறந்தவன் தான் கணினித் துறையில் புகழ் பெற்று விளங்கும் பெங்லீ. ஆனால் சந்திரசேகரோ படிப்பு முடிந்ததும் கொழுத்த சீதனத்துடன் ஊரில் பணக்காரப் பெண்ணொருத்தியை மணமுடித்து ஆஸ்திரேலி குடியேறியவர். இந்நிலையில் கணினித் துறையில் வியட்நாமுடன் கூட்டு முயற்சி சம்பந்தமாக அங்கு பெங்லியைச் சந்திக்கச் செல்லும் சந்திரசேகர் அவன் தான் தன் மகன் என்பதை அறிகின்றார். கிம் இன்னும் தனியாகவே வாழ்வதையும் அறிகின்றார். ஆனால் பெங்லியோ அவரை ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகின்றான். இதுதான் கதை. கிம்மின் துயரத்தைக் கூறும் கதை சந்திரசேகரின் சுயநலத்தையும் கோழைத்தனத்தையும் விமரிசிக்கின்றது.
2 Comments:
பாலமுருகன்,
ஒண்ணுமே எனக்குப் புரியலை.. இது புதுசா வந்துருக்கும் தமிழ் படமா அல்லது ஆங்கிலப்படமா அல்லது உண்மைக்கதை ஏதாவது ஒரு மொழியில் படமாக வந்திருக்கிறதா .. ?
சன் ஆஃப் மகாலட்சுமி அப்படின்னு ஒரு படம் வந்ததே ஞாபகம் இருக்கா .. ? அந்தக் கதைக் கரு அப்படியே ஞாபகம் வருது.
Post a Comment
<< Home