அணிவகுப்பு
ஜனாதிபதி அப்துல் கலாம் முன்னிலையில், தே.ஜ., கூட்டணியைச் சேர்ந்த 41 எம்.எல்.ஏ.,க்கள் அணிவகுப்பு நடத்தினர்.ஜார்க்கண்ட்டில் சிபுசோரன் முதல்வராக பதவியேற்றதை அடுத்து, அதிருப்தி அடைந்த தே.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் 33 பேர் ராஞ்சியில் இருந்து நேற்று முன்தினம் இரவே டில்லி வந்து சேர்ந்தனர்.
மீதமுள்ள எம்.எல்.ஏ.,க்கள் எட்டுப் பேரும் நேற்று காலை டில்லி வந்தனர். அவர்கள் அனைவரும் நேரடியாக டில்லியில் உள்ள குஜராத் பவனுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கடும் பாதுகாப்புகளுடன் தங்க வைக்கப்பட்டனர். குஜராத் பவனுக்கு வெளியில் பா.ஜ., மூத்த தலைவர் பிரமோத் மகாஜன் உட்பட பலர் காவலுக்கு நின்றனர். உள்ளே அத்வானி, பெர்னாண்டஸ் ஆகியோர் எம்.எல்.ஏ.,க்களுக்குத் துணையாக இருந்தனர்.மகாஜன் கூறுகையில், "கடந்த பல்லாண்டுகளில் கவர்னர் ஒருவரை டில்லி வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்த சம்பவம் இதுவே முதல் முறை. குறிப்பிடத்தக்க ஒரு நடவடிக்கையை ஜனாதிபதி எடுத்துள்ளார். அந்த உத்தரவு பற்றி மற்ற கவர்னர்கள் ஒரு முறைக்கு நுõறு முறை சிந்தித்துப் பார்க்க வேண்டும். தங்கள் மாநிலத்தில் முடிவெடுப்பதற்கு முன் ஜனாதிபதியின் உத்தரவை நினைத்து பார்த்து முடிவெடுக்க வேண்டும்' என்றார்.
அவர் மேலும் கூறுகையில், "ஜார்க்கண்ட் விமான நிலையத்தில் டில்லி செல்ல தயாராக இருந்த தே.ஜ., எம்.எல்.ஏ.,க்களை இரண்டு மணி நேரம் தடுத்து நிறுத்தினர். அதனால், கட்சி எம்.எல்.ஏ.,க்களை முதலில் பஸ் மூலம் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள கரக்பூருக்கு அழைத்துச் சென்றோம். அங்கிருந்து ஒரிசா மாநிலம், புவனேஸ்வருக்கு ரயில் மூலம் அழைத்துச் சென்றோம். அங்கிருந்து விமானம் மூலம் டில்லிக்கு அழைத்து வந்தோம். ஜார்க்கண்ட்டில் அரசியல் திருப்பங்கள் நடந்து கொண்டே இருப்பதால், எம்.எல்.ஏ.,க்களை ரகசியமாக மறைத்து மறைத்து இங்கு அழைத்து வந்தோம்' என்று சினிமாவில் வரும் காட்சிகளைப் போல் விவரித்தார்!
0 Comments:
Post a Comment
<< Home