Friday, March 04, 2005

'அம்மா பையன்'

பேராசிரியர் சந்திரசேகர் லுமும்பாப் பலகலைக் கழகத்தில் படிக்கும் போது சகமாணவியான வியட்நாமியப் பெண்ணான கிம்முடன் ஏற்பட்ட காதலின் விளைவாகப் பிறந்தவன் தான் கணினித் துறையில் புகழ் பெற்று விளங்கும் பெங்லீ. ஆனால் சந்திரசேகரோ படிப்பு முடிந்ததும் கொழுத்த சீதனத்துடன் ஊரில் பணக்காரப் பெண்ணொருத்தியை மணமுடித்து ஆஸ்திரேலி குடியேறியவர். இந்நிலையில் கணினித் துறையில் வியட்நாமுடன் கூட்டு முயற்சி சம்பந்தமாக அங்கு பெங்லியைச் சந்திக்கச் செல்லும் சந்திரசேகர் அவன் தான் தன் மகன் என்பதை அறிகின்றார். கிம் இன்னும் தனியாகவே வாழ்வதையும் அறிகின்றார். ஆனால் பெங்லியோ அவரை ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகின்றான். இதுதான் கதை. கிம்மின் துயரத்தைக் கூறும் கதை சந்திரசேகரின் சுயநலத்தையும் கோழைத்தனத்தையும் விமரிசிக்கின்றது.

புதிய அரசியல் கட்சி

புதிய அரசியல் கட்சியை ஜூன் மாதத்தில் தொடங்க உள்ளதாக நடிகர் விஜயகாந்த் தெரிவித்தார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய திங்கள்கிழமை அதிகாலை வந்த அவர், கோயிலில் நிருபர்களிடம் கூறியது:

புதிய அரசியல் கட்சித் தொடங்குவது உறுதி. ஜூன் மாதத்தில் கட்சியைத் தொடங்கலாம் என எண்ணியுள்ளேன். கால, நேரம் கனிந்து வருவதற்காகக் காத்திருக்கிறேன். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாகவே அரசியல் கட்சியைத் தொடங்க வாய்ப்புண்டு.

எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. கடவுள் நம்பிக்கை இருந்தாலும் அடிக்கடி கோயிலுக்குச் செல்லும் வழக்கம் இல்லை.

பெற்றோரையும், கடவுளையும் வீட்டிலேயே தினந்தோறும் வழிபடுவேன். ஏழைகளுக்கு உதவினால் இறைவன் அனுகிரகம் கிடைக்கும் என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை உண்டு. அதனாலேயே மருத்துவ முகாம்களை நடத்த உள்ளேன். இம் முகாம்களில் 1 கோடிக்கும் மேற்பட்ட ஏழைகள் பயனடைவார்கள்.

படங்களுக்கு தமிழ்ப் பெயர் வைக்காவிட்டால் படத்தைத் திரையிட அனுமதிக்க மாட்டோம் என சிலர் அறிவித்துள்ளனர். படங்களைத் திரையிட அரசு முழுப் பாதுகாப்பு அளிக்கும் என முதல்வர் அறிவித்துள்ளார். எனவே இப் பிரச்சினையில் நடிகர் சங்கம் தலையிட வேண்டிய அவசியம் இருக்காது. இதையும் மீறிப் பிரச்சினை எழுந்தால் நீதிமன்றத்தை நாடுவோம்.

திருட்டு விசிடி ஒழிக்கப்பட்டதால் திரைத்துறையினரின் பிரச்சினைகள் பெருமளவு குறைந்துள்ளன. நடிகர்கள் சங்கத்துக்கு நிரந்தரக் கட்டடம் கட்டும் பணி முக்கியமானது. அதன் மூலம் சங்கத்துக்கு நிரந்தர வருவாய் கிடைக்கும். அதற்கான முயற்சியில் தற்போது நான் ஈடுபட்டுள்ளேன்.

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி வழங்க தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் நான் ரூ.10 லட்சத்தை அளித்து விட்டேன். அப்பணத்தை அவர்கள் அப்படியே வைத்துள்ளனர். மற்ற நடிகர்கள் அளித்த நிதி முதல்வரின் நிவாரண நிதியில் சேர்க்கப்பட்டிருக்கும் என்றார் விஜயகாந்த். அவரது மனைவி பிரேமலதா உள்ளிட்டோர் உடன் வந்திருந்தனர்.

கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் காரிலேயே அவர் கிரிவலம் சென்றார்.

அணிவகுப்பு

ஜனாதிபதி அப்துல் கலாம் முன்னிலையில், தே.ஜ., கூட்டணியைச் சேர்ந்த 41 எம்.எல்.ஏ.,க்கள் அணிவகுப்பு நடத்தினர்.ஜார்க்கண்ட்டில் சிபுசோரன் முதல்வராக பதவியேற்றதை அடுத்து, அதிருப்தி அடைந்த தே.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் 33 பேர் ராஞ்சியில் இருந்து நேற்று முன்தினம் இரவே டில்லி வந்து சேர்ந்தனர்.

மீதமுள்ள எம்.எல்.ஏ.,க்கள் எட்டுப் பேரும் நேற்று காலை டில்லி வந்தனர். அவர்கள் அனைவரும் நேரடியாக டில்லியில் உள்ள குஜராத் பவனுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கடும் பாதுகாப்புகளுடன் தங்க வைக்கப்பட்டனர். குஜராத் பவனுக்கு வெளியில் பா.ஜ., மூத்த தலைவர் பிரமோத் மகாஜன் உட்பட பலர் காவலுக்கு நின்றனர். உள்ளே அத்வானி, பெர்னாண்டஸ் ஆகியோர் எம்.எல்.ஏ.,க்களுக்குத் துணையாக இருந்தனர்.மகாஜன் கூறுகையில், "கடந்த பல்லாண்டுகளில் கவர்னர் ஒருவரை டில்லி வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்த சம்பவம் இதுவே முதல் முறை. குறிப்பிடத்தக்க ஒரு நடவடிக்கையை ஜனாதிபதி எடுத்துள்ளார். அந்த உத்தரவு பற்றி மற்ற கவர்னர்கள் ஒரு முறைக்கு நுõறு முறை சிந்தித்துப் பார்க்க வேண்டும். தங்கள் மாநிலத்தில் முடிவெடுப்பதற்கு முன் ஜனாதிபதியின் உத்தரவை நினைத்து பார்த்து முடிவெடுக்க வேண்டும்' என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "ஜார்க்கண்ட் விமான நிலையத்தில் டில்லி செல்ல தயாராக இருந்த தே.ஜ., எம்.எல்.ஏ.,க்களை இரண்டு மணி நேரம் தடுத்து நிறுத்தினர். அதனால், கட்சி எம்.எல்.ஏ.,க்களை முதலில் பஸ் மூலம் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள கரக்பூருக்கு அழைத்துச் சென்றோம். அங்கிருந்து ஒரிசா மாநிலம், புவனேஸ்வருக்கு ரயில் மூலம் அழைத்துச் சென்றோம். அங்கிருந்து விமானம் மூலம் டில்லிக்கு அழைத்து வந்தோம். ஜார்க்கண்ட்டில் அரசியல் திருப்பங்கள் நடந்து கொண்டே இருப்பதால், எம்.எல்.ஏ.,க்களை ரகசியமாக மறைத்து மறைத்து இங்கு அழைத்து வந்தோம்' என்று சினிமாவில் வரும் காட்சிகளைப் போல் விவரித்தார்!