தசாவதாரம் தீபாவளியன்று கலைஞர் டிவியில்
கமலின் பிரமாண்டமான தசாவதாரத்தை வாங்க கடந்த சில நாட்களாக பேச்சு வார்த்தை நடந்து வந்தது. கலைஞர் டி.வி. நிர்வாகத்தினரும் தசாவதாரம் தயாரிப்பாளரான ஆஸ்கார் ரவிச்சந்திரனும் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் நேற்று உடன்பாடு ஏற்பட்டது. தசாவதாரம் கலைஞர் டி.வியில் தீபாவளி அன்று ஒளிபரப்பாகவுள்ளது.
இந்த படத்தில் கமலஹாசன் பத்து வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அசின் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். மல்லிகா ஷெராவத், ஜெயப் பிரதா, நெப்போலியன், சந்தான பாரதி, எம்.எஸ். பாஸ்கர் ஆகியோரும் நடிக் கின்றனர். கே.எஸ். ரவிக்குமார் இயக்குகிறார்.
இதுவரை இல்லாத அளவுக்கு அதிக செலவில் இப்படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. பிரமாண்ட அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடக்கிறது. அமெரிக்காவில் உள்ள விஞ்ஞான ஆராய்ச்சி மையத்திலும் படப்பிடிப்பு நடந்தது. மலேசியாவில் 20 அமெரிக்க அழகிகளுடன் கமலும், மல்லிகா ஷெராவத்தும் நடனமாடும் காட்சியொன்றும் ஆடம்பர நடன கிளப் ஒன்றில் படமாக்கப்பட்டது.
747 ஜெட் விமானத்துக்குள் கமலஹாசன் ஊடுருவும் காட்சி யொன்றும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது. படப்பிடிப்பு இறுதி கட்டத்தை அடைந் துள்ளது.
இதற்கிடையே படத்தின் வெளியீடு ஆகஸ்ட் மாதம் தள்ளிப் போயிருக்கிறது. சுதந்திர தின சிறப்பாக கமலின் தசாவதாரம் ரசிகர்களை மகிழ்விக்கும் என்று நம்பப்படுகிறது.
0 Comments:
Post a Comment
<< Home