Tuesday, November 20, 2007

கெளடா கொடுத்த அல்வா

பா.ஜ.கவின் பதவி வெறிக்கு சாவு மணி அடித்திருக்கிறார் கெளடா. இதுவொரு மதச்சார்பின்மைக்கு கிடைத்த வெற்றி. சிறுபான்மையினர், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூத்தில் அடித்தள மக்களின் ஆதரவில்லாமல் பெங்களூரில் ஒரு வார பா.ஜ.கவின் ஆட்சி நிச்சயமாக தென்னிந்திய அரசியலுக்கு கரும்புள்ளி என்று நிச்சயமாக சொல்ல முடியும்.
 
 
கர்நாடகத்தில் பதவியேற்ற 7 நாளில் புதிய அரசு கவிழ்ந்ததால் அங்கு ஜனாதபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. மேலும் அங்கு சட்டசபையை கலைக்கவும் முடிவு செய்துள்ளது.
 
பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் இரு கட்சிகளையும் சேர்ந்த 129 எம்.எல்.ஏ.,க்கள், கவர்னர் ராமேஷ்வர் தாக்கூர் முன் அணிவகுப்பு நடத்தினர். இருந்தாலும், ஆட்சி அமைக்க பா.ஜ.,விற்கு கவர்னர் அழைப்பு விடுக்கவில்லை.
 
அதிருப்தி அடைந்த பா.ஜ., போராட்டம் நடத்தியது.டில்லி சென்ற இரு கட்சிகளையும் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் முன்பாக அணிவகுப்பு நடத்தினர். கவர்னர் ராமேஷ்வர் தாக்கூரும் மாநில அரசியல் நிலவரம் பற்றிய இறுதி அறிக்கையை உள்துறை அமைச்சரிடம் அளித்தார்.
 
கடந்த 12ம் தேதி எடியூரப்பா முதல்வர் பதவியை ஏற்றார். எடியூரப்பாவுடன் பா.ஜ.,வை சேர்ந்த நான்கு பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். எடியூரப்பா பதவியேற்ற பின் கலந்து கொண்ட முதல் கேபினட் கூட்டத்தில், தனது அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு இம்மாதம் 23ம் தேதி நடைபெறும் என அறிவித்தார். எடியூரப்பா பதவியேற்பதற்கு முன்பாக, இந்த அரசு நீடிக்க வேண்டுமென்றால் தனது 12 நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என ம.ஜ.த., தலைவர் தேவகவுடா,  இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உருவாக்கி, அதில் கையெழுத்திட வேண்டும் எனவும் அவர் முதல்வர் எடியூரப்பாவை வலியுறுத்தி வந்தார்.

0 Comments:

Post a Comment

<< Home