Monday, July 02, 2007

சிகாகோவில் சிவாஜி!

சிகாகோவில் உள்ள தமிழ்நாடு அறக்கட்டளக்கு நிதி சேர்ப்பதற்காக சிவாஜி திரைப்படம் திரையிடப்படுகிறது. யுஎஸ்ஏ மற்றும் பரத் கிரியேஷன்ஸ் இணைந்து இந்த நல நிதிக் காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இதில் வசூலாகும் நிதி முழுவதும் தமிழ்நாடு அறக்கட்டளைக்கு அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளது. இந்த அமைப்பு தமிழகத்தில் உள்ள மன நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள், முதியவர்கள், படிப்புதவி, பள்ளிகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு தொண்டுகளில் ஈடுபட்டுள்ளது.

தங்களது அமைப்புக்கு உதவுவதற்காக சிவாஜியின் உதவியை தமிழ்நாடு அறக்கட்டளை நாடியது. இதையடுத்து சிவாஜி சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நல்லதுக்காகவும் சிவாஜி பயன்படுகிறது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மறைமுகமாக உதவிக் கரம் நீட்டுகிறார் என்பதற்காக சந்தோஷப்படலாம்.

இதற்கிடையே சிகாகோவாவில் தொடர்ந்து சிவாஜி வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து 3 வாரங்களாக ஓடிய முதல் தமிழ்ப் படம் என்பது சிகாகோவில் சிவாஜி படைத்துள்ள புதிய சாதனையாகும்.

எல்லா இடத்திலும் வசூல் சாதனை படைத்து வரும் சிவாஜி, கேரளாவிலும் வசூலில் பின்னி எடுத்து வருகிறதாம். 2வது வாரமாக கேரளாவில் சிவாஜி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த இரு வாரங்களிலும் சிவாஜியின் வசூல் ரூ. 4 கோடியாம்!

கேரள விநியோகஸ்தரான ஜானி சாகரிகா சிவாஜியை ரூ. 3.2 கோடி கொடுத்து வாங்கினார். அந்தத் தொகையை இரண்டே வாரங்களில் திருப்பி எடுத்து லாபமும் பார்த்து விட்டார்.

ஆரம்பத்தில் 86 தியேட்டர்களில் சிவாஜி திரையிடப்பட்டிருந்தது. இது கேரள திரையுலகில் புதிய சாதனை. மலையாளப் படம் கூட இந்த அளவுக்கு அதிகமான தியேட்டர்களில் திரையிடப்பட்டதில்லையாம். ஆனால் தற்போது 60 தியேட்டர்களாக சிவாஜி குறைந்து விட்டதாம்.

திருவனந்தபுரத்தில் இன்னும் படு கூட்டமாக இருக்கிறதாம். இங்கு மட்டும் ரூ.20லட்சம் லாபத்தைப் பார்த்துள்ளதாம் சிவாஜி. கேரளாவில் ரஜினி படத்தை குடும்பம் குடும்பமாக பார்க்க வருகிறார்களாம் ரசிகர்கள்.

கொச்சியில், இந்தப் படம் 100 சதவீத லாபத்தை விநியோகஸ்தர் ஜானி சாகரிகாவுக்கு கொடுத்துள்ளதாம்.

மலையாள திரையுலகின் டாப் 5 படங்களில் சிவாஜிக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. படம் வெளியான நாள் முதலே முதலிடத்தில்தான் இருக்கிறதாம் சிவாஜி.

முன்பு தளபதிக்கு இந்தப் பெருமை கிடைத்தது. ஆனால் அதில் மம்முட்டி நடித்திருந்தார் என்பதால் மலையாளப் பாசத்தில் அப்படத்துக்கு முதலிடம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் முழுக்க முழுக்க ஒரு தமிழ்ப் படத்திற்கு முதலிடம் கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

கூல், கூல் ...!

0 Comments:

Post a Comment

<< Home