புலிகள்... எம்.ஜி.ஆர்... கலைஞர்
சமீபத்தில் விகடன் இதழில் படித்தது. அடியேனின் பின்குறிப்புடன்.
கோபத்தின் உச்சத்தில் கொந்தளிக்கிறார் வைகோ!
‘‘ஈழத் தமிழர் பாதுகாப்பு பொதுக் கூட்டத்தில் நான் பேசியது இந்திய இறையாண்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது என்று குற்றம் சாட்டி, என்னைச் சிறையில் அடைக்கத் துடிக்கிறார்களாம். அதுதான் சர்க்கரைச் சேதி. கைதுக்கும் சிறைக்கும் எப்போதும் அஞ்சுபவன் அல்ல இந்த வைகோ. வழக்குகள் வரட்டும், காத்திருக்கிறேன்!’’
திரும்பவும் பொடாவில் உள்ளே போனால் மட்டுமே தலைப்பு செய்திகளில் வரமுடியும் என்பதை புரிந்து வைத்திருக்கிறார்.
இப்போது இலங்கை அரசுக்கு மாபெரும் சிம்ம சொப்பனமாகப் புலிகள் இருக்கிறார்களே, இதற்கு எப்போதோ அடித்தளம் அமைத்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்! அவர்தான் புலிகளுக்கு ஆரம்பத்தில் உதவிகளை வாரிக் கொடுத்தவர். அந்த வகையில் கலைஞரைவிட, பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆரைத்தான் ரொம்பவும் பிடிக்கும்.
எம்.ஜி.ஆருக்கே இது ஆனந்த அதிர்ச்சியாக இருக்கும். நம்ம ஆளுங்க எப்படியெல்லாம் ·பீல் பண்றாங்கப்பா என்று வடிவேலு பாணியில் கர்ச்சீப்பை கையில் வைத்து விம்மிக்கொண்டிருப்பார்.
எம்.ஜி.ஆர், மறைவதற்கு சில நாட்களுக்கு முன்பு டெல்லிக்குச் சென்றிருந்தார். இலங்கை அரசுக்கு மத்திய அரசு போர் உதவிகளை செய்வதை நிறுத்தச் சொல்லி வற்புறுத்தினார். இலங்கையில் போர் நிறுத்தத்துக்கு வகை செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டார். ஆனால், மறுநாள் காலையில் ‘தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். எங்களிடம் இலங்கை தொடர்பாக எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை’ என்று மத்திய அரசு சொன்னது. எனக்குத் தெரிந்து இந்த மன வருத்தம்தான் எம்.ஜி.ஆரின் உடல்நிலையை மோசமடையச் செய்திருக்க வேண்டும்.
எம்.ஜி.ஆரின் டெல்லி விசிட்டை இப்படிக்கூட சொல்ல முடியமா? ஜெயலலிதாவுக்கு ஆதரவு கொடுக்க வேண்டாம் என்று ராஜீவ் காந்தியிடம் சொல்லத்தானே டெல்லிக்கு போனார்.
நான் பிரபாகரனைச் சந்திக்கப்போவது யாருக்கும் தெரியக் கூடாது என்பதற்காக, இப்போது கடல் புலிகளின் தலைவராக இருக்கும் சூசையை என் வீட்டுக்கு வர வழைத்து, என் மனைவிக்குக் கேட்கும் படியாக, ‘லண்டனுக்கு விசா எடுங்கள்’ என்று போலியாக உரக்கச் சொல்லி அனுப்பினேன். அடுத்து என் உதவியாளர் திவானை அழைத்து, குட்டி என்பவர் மூலமாக கலைஞருக்கு ஒரு கடிதம் கொடுத்து, அதை மறுநாள் காலையில் கொடுத்துவிடச் சொன்னேன்.
அந்த கள்ள தோணியை கொண்டு வந்து கடலோரத்தில் நிறுத்தியவர்கள் யார் என்பதை சொல்வாரா?
இந்தச் செய்தியெல்லாம் தமிழகத்திலிருந்து புலிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு, என்னிடம் சொல்லப்பட்டது. அப்போது பிரபாகரன் என் பக்கத்தில் இருந்தார். ‘நான் பெரிதும் நம்பிய என் சொந்தக் கட்சியே எனக்கு மாபெரும் துரோகம் செய்துவிட்டது. இனி நான் இந்தியா போக மாட்டேன். தமிழகத்துக்கும் போக மாட்டேன்’ என்று முடிவெடுத்தேன். ஆனால் பிரபாகரனோ, ‘நீங்கள் தமிழ்நாட்டுக்குப் போக வேண்டும். அண்ணிக்கு நான் என்ன பதில் சொல்வேன்? அவர்கள் கையால் எத்தனை முறை சாப்பிட்டிருப்பேன்! உங்களைக் கட்சியிலிருந்து நீக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எனக்குத் தகவல்கள் வருகின்றன. நீங்கள் தமிழ்நாட்டுக்குப் போயாக வேண்டும்’ என்று சொன்னார். 57 புலித் தோழர்களின் பாதுகாப்புடன் என்னை இந்திய மண்ணுக்கு அனுப்பிவைத்தார்.
இங்கிருந்தால் எங்களுக்கு தான் ஆபத்து. எங்களை பற்றி நீங்கள் வைத்திருக்கும் நல்ல அபிப்பிராயம் போய்விடும். அதுவும் இல்லாமல் தமிழ்நாட்டில் இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது என்று பிரபாகரன் நினைத்திருக்கலாம்.
நாங்கள் திரும்பும்போதும் இந்திய ராணுவம் எங்கள் மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்தியது. அப்போது என் அருகில் ஒரு குண்டு விழ, அதிலிருந்து என்னைத் தப்பிக்கவிட்டு, தான் தாங்கிக்கொண்டு சரத் என்ற புலித் தளபதி உயிர்விட்டார். தன் உயிர் கொடுத்து என் உயிர் காத்த சரத்தின் படத்தை இன்றும் என் வீட்டில் மாட்டியிருக்கிறேன். இத்தனைக்குப் பிறகும், என் பயணம் பற்றி கலைஞர் தொடர்ந்து இல்லாததெல்லாம் பேசினால், நான் விரிவாக விரைவில் சில உண்மைகளைச் சொல்வேன். அப் போது தெரியும், கலைஞரின் நிஜ முகம்!
சரத்குமார் செத்ததால்தான் நான் கட்சி ஆரம்பித்து விடுதலைப்புலிகளை ஆரம்பித்தேன். பொடாவில் கைது செய்ததால்தான் ஜெயலலிதாவை எதிர்த்து போராட்டம் நடத்தினேன். சீட் கொடுக்காததால்தான் கலைஞரை எதிர்த்தேன். பெட்டி கிடைத்ததால்தான் ஜெயலலிதாவை போற்றி புகழ்ந்தேன் என்று வாக்குமூலத்தை தொடரலாமே.
ஈழப் பிரச்னை குறித்து நான் பேசியதற்கு, என்னைக் கைது செய்ய வேண்டும் என சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள், முதல்வரை நிர்ப்பந்திக்கிறார்கள். நான் அந்தப் பொதுக் கூட்டத்தில் பேசிய விஷயங்களை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஏற்கெனவே நேரில் விவாதித்திருக்கிறேன். ‘தமிழகத்தில் ஒரு காஷ்மீர் நிலைமை வர வேண்டுமா என்பதை யோசித்துப் பாருங்கள்’ என்றே சொல்லியிருக்கிறேன். அதற்கு அர்த்தம் காஷ்மீர் மாதிரி தமிழகத்திலும் வன்முறை நிகழும் என்பதல்ல. இப்போதுள்ள இளைஞர்கள் வன்முறைக்கு எளிதில் பலியாகி தங்கள் வாழ்க்கையைத் தொலைத்துவிடுகிறார்கள். அந்த இளைஞர்கள் வன்முறைப் பக்கம் திரும்ப, இலங்கைப் பிரச்னை ஒரு காரணமாகிவிடக் கூடாது என்பதைத்தான் சொன்னேன்.
இந்த வெட்டி பில்டப் எத்தனை நாளைக்கு என்று ம.தி.மு.கவில் இருக்கும் ஐம்பது வயதை கடந்த இளைஞர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்களாம்.
எனக்கும் எங்கள் இயக்கத்துக்கும் வன்முறை மீது துளியும் விருப்பம் கிடையாது. அதை நாங்கள் எப்போதும் ஏற்றுக்கொள்பவர்களும் அல்ல. மனித நேயம்தான் எப்போதும் வெல்லும். ஆனால், ஈழப் பிரச்னை அப்படி அல்ல. காரணம், அங்கு ஏற்கெனவே பற்றவைத்த தீ கொழுந்துவிட்டு எரிகிறது. அது வெந்து தணியும்போது விடியல் நிச்சயம்!’’
அதுவரைக்கும் நான் இருந்தாக வேண்டும். சோறு போட பிரபாகரனும் குழம்பு ஊற்ற அம்மாவும் இருக்கிறார்கள். ஆண்டவனே, கலைஞர் சாகும்வரை இந்த தயாநிதி மாறனிடமிருந்து என்னை காப்பாற்றி வைத்திருந்தால் போதும்.
3 Comments:
உங்க கமெண்ட் எல்லாம்.. அப்பா.. பயங்கரமான கேள்விகள்.. ரொம்ப அறிவுப்பூர்வமா கேள்வி கேட்கிறதா நினச்சி கேணத்தனமா இருக்கு...
இதுக்கு பேசாமா, கலைஞசருக்கு கூஜா தூக்க்லாம்...
வைகோவெல்லாம் ஒரு மனுசன்னு கேள்வியெல்லாம் கேட்டுக்கிட்டு.....
உங்களை மாதிரி இருப்பவர்கள் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரமாவது செய்யாமல் இருக்கலாமல்லவா!!!
உதவி நீட்டும் கரங்களையும் கேவலப்படுத்துகின்றீர்களே!!!
உங்களிற்கெல்லாம் இலங்கையில் தமிழன் என்றொரு இனம் உண்டென்று தெரியுமா????
Post a Comment
<< Home