Wednesday, July 12, 2006

திரும்பவும் மூளை

முதலில் என்னை புரிந்து கொண்டு பாராட்டியவர்களுக்கு நான் நன்றி சொல்ல கடைமைப்பட்டுள்ளேன். சொல்ல வந்த விதம் சரியானது என்றாலும் தலைப்பு சரியில்லை என்று சொன்னார்கள். சுட்டிக்காட்டிய நண்பர்கள் முக்கியமாக மூர்த்தி, பாலசந்தர் கணேசன், நாகை சிவா ஆகியவர்களுக்கு எனது மனமார்ந்து நன்றிகள் பல. நண்பர் சீனுவுக்கு ஒரு வார்த்தை. மற்றவர்கள் செய்ததைத்தான் நான் செய்தேன் என்பது எல்லோருக்கும் தெரியும். மற்றவர்கள் சம்பந்தமில்லாமல் செய்தார்கள். எனது பதிவில் சம்பந்தம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

மூளை நிறைய இருக்கும் அமீரகத்து பொடியன் தெரிந்தே உளறியிருக்கிறார். வெளியான படத்தின் பெட்டியை பிடுங்கிவிட்டது போல நின்று எழுதியிருக்கிறார். இப்போது அமீரகத்து ஆசாமியின் ஜாதி என்ன என்பது எல்லோருக்கும் தெரிய வந்துவிட்டது. எத்தனை மரத்தை வெட்டி சாய்த்தார்களோ? நடுநடுவே வந்து உளறும் தி. ராஸ்கோலுவை கேட்டால் சொல்வாரா? தமிழனின் நலனுக்காக இந்த தி.ராஸ்கோலு என்னதான் செய்திருக்கிறார்? குறைந்த பட்சம் திருச்சி ஓட்டலில் தங்கர் பச்சான் என்ன செய்தார் என்பதையாவது தெரிந்து வைத்திருக்கிறாரா? நண்பர் வசந்தனின் வாதம் விஷமத்தனமானது. பிரச்சினைக்குரிய பதிவிலும் அதை பற்றி எங்கும் சொல்லாத வசந்தன் இங்கே பொங்கி எழுந்திருப்பதற்கு காரணம் தான் ஒரு இலங்கையை சேர்ந்த தமிழன் என்பதால்தான். ஆனால் தமிழகத்தை சேர்ந்த தமிழர்கள் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள் என்று நான் எதிர்பார்த்தது அப்படியே நடந்திருக்கிறது. ஆகவே தற்போதைய தலைப்பு பொருத்தமாகத்தான் இருக்கும்.

நான் ரஜினி செய்வதையெல்லாம் நியாயப்படுத்த முடியாது. அதற்கு நிறைய ஆசாமிகள் இருப்பார்கள். தனக்கென்று ஒரு ஜால்ரா கூட்டத்தை உருவாக்கவும் ரஜினிக்கு அவசியம் இல்லை. சபேசன் போன்றவர்கள் மிரட்டத்தேவையில்லை. என்னால் ரஜினிக்கோ ரஜினி ரசிகர்களுக்கோ பிரச்சினை என்றால் மன்னிப்பு கேட்க நான் தயார். நண்பர் ரஜினி ராம்கி இந்த பதிவை படிப்பார் என்று நினைக்கிறேன். பிரச்சினையை எதிர்த்து சமாளிக்காமல் ரஜினி போலவே நழுவி செல்வதை ரஜினி ராம்கியின் பெரிய குறையாக நான் பார்க்கிறேன். இதை சொல்வதால் அவர் நிச்சயம் தப்பாக எடுத்துக்கொள்ளமாட்டார் என்பதும் எனக்கு தெரியும். சவாலை நேரிடையாக சந்திக்க முடியாமல் சபேசன் போன்ற ஜால்ரா ஆசாமிகள் மிரட்ட ஆரம்பிப்பார்கள் என்பதை நான் முன்பே எதிர்பார்த்ததுதான். ரஜினியின் ரசிகர்களே மிரண்டு போய்விடாதீர்கள். நிமிர்ந்து நில்லுங்கள். இதுவரை ரஜினி என்ன பெரிய தவறை செய்துவிட்டார்? ஏகப்பட்ட ஊழல் செய்து, இன்னும் சுரண்டிக் கொண்டிருக்கும் நிறைய தமிழர்கள் இங்கே இருக்கும்போது. என்னால் ரஜினியின் நடிப்பை விமர்சிக்க முடியும். ரஜினியின் நடிப்பு பிடிக்காது. அதற்காக ரஜினி என்கிற மனிதரை அரசியல் ரீதியாகவே அணுகுவதை தவறான விஷயமாக நினைக்கிறேன். எல்லாரிடமும் ஏதாவதொரு திறமை இருக்கத்தான் செய்கிறது. என்னை ரஜினி ரசிகனாக பார்க்காமல் நான் சொல்வதை மட்டும் சரியாக இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள்.

பெங்களூரில் வள்ளுவர் சிலை வேண்டும் என்று கோஷம் போடுகிறார்கள். அய்யா, முதலில் உங்கள் வீட்டில் வள்ளூவர் பொம்மையாவது வைத்திருக்கிறீர்களா? காவிரி பிரச்சினையில் பெங்களூர் தமிழர்களை காப்பாற்றியதே ரஜினிதான் என்பது உன்னைப்போன்ற பொடியன்களுக்கு தெரியாது. அதற்கு 15 ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வுகள் உங்களுக்கு தெரிந்தாகவேண்டும். அப்போது உங்களுக்கு ஆறு வயதுதான் இருக்கும். நதி நீர் இணைப்புக்கு நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் அல்லது செய்யப்போகிறீர்கள் என்பதை கொஞ்சம் சொல்லமுடியுமா? ரஜினி ரசிகர்களை விட தமிழ்நாட்டில் நதி நீர் இணைப்பு வேறு யார்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதையாவது சொல்ல முடியுமா? ஜெயலலிதாவை தைரிய லட்சுமி என்று சொன்னதில் என்ன தவறு இருக்கிறது. அப்படி சொல்லாமல் இருந்திருந்தால்தான் அது தவறு. ஜெயலலிதா என்கிற ஒரு பாப்பாத்தியின் தைரியத்தை உங்களால் செரிக்க முடியவில்லை என்பதைத்தான் இது எடுத்துக்காட்டுகிறது. இது போல வெட்டியாக பேசுவதை விட்டுவிட்டு ஆரோக்கியமாக எதையாவது பேசுங்கள். முதலில் தமிழ் உணர்வு என்றால் என்ன என்பதை தெளிவாக சொல்லுங்கள். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் முந்தா நாள் வரை எனக்கு தமிழர்கள் என்கிற வார்த்தையின் மீது எனக்கு ஒரு வித கவர்ச்சி இருந்தது. அந்த மயக்கத்தை போக்கி வெளிச்சத்தை காட்டிய பொடியன்களுக்கு நான் நன்றி சொல்லவேண்டும்.

4 Comments:

At 12:21 PM, Blogger பாலசந்தர் கணேசன். said...

நல்ல படியாக எடுத்து கொண்டதற்கு நன்றி. தலைவர்களின் மீது இருக்கும் கண்மூடித்தனமான விசுவாசம் குறைகிறது என்பதற்கு எடுத்து காட்டு சரிந்து வரும் கட்சிகளின் வாக்குகள். மிக பெரிய கூட்டணி எதிர்த்து அ.தி.மு.க மற்றும் தே.மு.தி.க இவ்வளவு வாக்குகளை பெற்றிருப்பது மக்கள் முன்பு மாதிரி இல்லை என்பதை காட்டுகிறது. கொஞ்சம் விழிப்புணர்ச்சி அதிகமாகி உள்ளது.

 
At 11:11 PM, Blogger ஜெ. ராம்கி said...

I respect your comments. I feel something bad after seeing these type of discussions. I didn't expect that this would go this much serious. However, lot of blatant attack has been already made on Rajni & his fans and almost all became vain. I strongly believe that it will not be useful. I would be happy if it could be brought to an end. Thanks.

 
At 11:33 PM, Blogger ராபின் ஹூட் said...

சிந்திக்க வேண்டிய பதிவு. தமிழ்மணத்தில் குலைத்துக் கொண்டிருக்கும் பார்ப்பன மிருகங்கள் சிந்திக்க வேண்டும்.

ரஜினியாவது கிள்ளி கொடுத்தார். அவங்க "அம்மா" என்ன கொடுத்தார்?

 
At 9:36 AM, Blogger வசந்தன்(Vasanthan) said...

//நண்பர் வசந்தனின் வாதம் விஷமத்தனமானது. பிரச்சினைக்குரிய பதிவிலும் அதை பற்றி எங்கும் சொல்லாத வசந்தன் இங்கே பொங்கி எழுந்திருப்பதற்கு காரணம் தான் ஒரு இலங்கையை சேர்ந்த தமிழன் என்பதால்தான்//

ஐயா பாலமுருகன்,
நான் சொன்னதில் என்ன விசமத்தனம் இருக்கிறது என்பதைச் சொல்லமுடியுமா?
சும்மா சகட்டு மேனிக்கு சொற்களைப் போட்டு வசனத்தை ஒப்பேற்றக்கூடாது.

அல்லது மகேந்திரனோ நானோ எழுதிய தமிழ் விளங்கவில்லையா?
மகேந்திரனை விடுவோம். நானெழுதியதை மட்டும் பார்ப்போம்.
தங்கர் தங்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ரசிகர்கள் சொன்னதுதான் பிரச்சினை. அப்படிச் சொன்னதற்காகவே இந்த 'மூளை' இருக்கா இல்லையா என்ற வாதம். ரஜனி கருத்துத் தெரிவிப்பதோ தெரிவிக்காமல் இருப்பதோ அன்று.

மேலும் நீங்கள் சொன்னது என்னவென்றால், திரையுலகினரால் பெரிதாக எதையும் சாதிக்க முடியாதென்றும் அதை ரஜனி நன்கு அறிந்துவைத்திருந்தார் என்பதும்.
நான் கேட்டது, அப்படி எதுவும் சாதிக்க முடியாதென்று நன்கு தெரிந்த நிலையில்தானா உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது?

திரும்பவும் கேட்கிறேன், என் கருத்தில் என்ன விசமத்தனம் உள்ளதென்று சொல்லவும்.

 

Post a Comment

<< Home