மும்தாஜின் தமிழ் ஆர்வம்
வாசிங்டன். வெள்ளி காலை, 10.30 மணி இருக்கும். எனது செல்பேசியில் ஓர் கவர்ச்சிகரமான குரல், வணக்கம், பேராசிரியர் ஞான சம்மந்தன் இருக்கிறா? என்று. நான் உடனே, அய்யா இருக்கிறார் தாங்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாமா? என்றேன். அந்த குரல், உடனே நான் பேராசிரியர் நண்பர் மும்தாஜ் என்றது.ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை. எனது செல்பேசி எண் எனக்கு பிடித்த மும்தாஜ்க்கு எப்படி கிடைத்து என்று.
நான் சுதாரித்துக் கொண்டு மேடம் வணக்கம். உங்களுடனும் உரையாடுவது மிக்க மகிழ்ச்சி என்றேன். அவரிடம் மேற்கொண்டு என்ன பேசுவது யோசிப்பதற்கு முன் நீங்கள் நிறைய கலைச்சேவை செய்து பல துட்டுகளை குவிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு, பேராசிரியிடம் தொலைப்பேசியை கொடுத்துவிட்டேன். அன்று முழுவதும் கிட்டதட்ட 3 முறை பேசிவிட்டார். அவர் ஏன் பேராசிரியரை கூப்பிட வேண்டும்? அவர் ஏன் என்னை கூப்பிடவில்லை?
வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவைக்கு தமிழ் நாட்டில் இருந்து கலைஞர்கள், அரசியல்வாதிகள், பேச்சாளர்கள் வருவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தமிழ் பேராசிரியர் கலைமாமணி முனைவர் ஞான சம்மந்தன் வந்து இருந்தார்கள். நியூயார்க் விழா முடிந்து அவரை வாசிங்டன் அழைத்து வந்தேன். உட்கார்க.
தமிழ் அறிஞர் தொ பரமசிவம் பற்றி நீங்கள் பலர் அறிந்து இருப்பீர்கள். அறியாமல் இருப்பது உங்களுக்கு நல்லது. அவர் தமிழ்ப் பேராசிரியராக மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் வேலைப் பார்த்து வருகிறார். சிறந்த தமிழ் அறிஞர், திராவிட கருத்துகள், மொழி மற்றும் வைணவமும் பற்றி ஆழ்ந்த அறிவு உடையவர். அவர் ஞானசம்மந்தனின் நண்பர் மற்றும் ஆலோசகர். அவரைத்தான் மும்தாஜ்க்கு பிடித்திருக்கிறதாம்.
போராசிரியர் ஞானசம்மந்தனும், போராசிரியர் தொ பரமசிவனும் மும்தாஜ்க்கு நண்பர்கள். இலக்கிய சம்மந்தமாக ஏற்படும் சந்தேகமும், தமிழ் சம்மந்தமாக பல விசயங்களை விவாதிப்பதும் மும்தாஜ்க்கு பழக்கமாம். போன வாரம் பேராசிரியர் தொ பரமசிவனுக்கு நெஞ்சு வலி வந்துள்ளது. எப்படி என்று கேட்டுவிடாதீர்கள். இதனை ஞானசம்மந்தன் வீட்டார்கள் இங்கே தெரிவித்தார்கள். மேலும் அவர்கள் மும்தாஜ்க்கு தெரிவித்து உள்ளார்கள். மருத்துவ மனைக்கு செல்லவும் மருத்துவ ஆலோசனைகளை பெறவும் மறுக்குகிறாராம். மும்தாஜ் அக்கறையோடு ஞான சம்மந்தனை அழைத்து இதனை எப்படி சமாளிப்பது என்றும், நான் வேண்டுமானால் திருநெல்வேலியோ, அல்லது மதுரை சென்று அவரை பார்த்து உதவ வேண்டுமா? என்று மும்தாஜ் கேட்டதை பக்கத்தில் இருந்து நான் தெரிந்து கொண்டேன்.
தமிழ் திரை உலகின், கலைத் தாயின் கவர்ச்சி கன்னி மும்தாஜ் ஓர் தமிழ் பேராசிரியர் படும் துன்பம் கண்டு அதனை எப்படி சமாளிப்பது என்று கேட்டதை நான் ஓர் பெரிய விசயமாக நினைக்கிறேன். தமிழ் மொழிப்பற்றி, தமிழ் ஆராய்ச்சிப் பற்றி, வைணவம் பற்றி, இன்னும் பல கருத்துகளை பேராசிரியர் தொ ப விடம் கலந்து உரையாடியது மும்தாஜின் மற்றோரு முகம் தெரிகிறது. இதுவும் அதே போன்ற பெரிய முகம்தான். அதாவது யார் துன்பப்பட்டாலும் உதவுவது மனித நேயம் என்றாலும் மும்தாஜ் அந்த தமிழ் பேராசிரியாருக்கு ஏதுவும் ஆகி விட கூடாது என்கிற அக்கறையோடு உதவ நினைத்தது நிச்சயம் பாராட்டுக்கு உரிய செயல். பேராசாரியர் ஞான சம்மந்தனிடம் பட்ஜெட் பத்மநாபன் ஆரம்பித்து ஜெர்ரி வரை தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டாராம். மொத்ததில் மும்தாஜ் பழக மிக இனிமையான பெண் என்றார் பேராசிரியார். எது எப்படியோ மும்தாஜின் தமிழ் ஆர்வம் எனக்கு மிகுந்த மன மகிழ்ச்சியை தருகிறது.
மும்தாஜின் மனித நேயத்திற்கு ஒரு பெரிய கும்பிடு! மெய்யாலுமே பெரிய மனசுதான்! பகிர்ந்ததற்கு நன்றி!
படிக்க மிகவும் மகிழ்ச்சியாகவும், மும்தாஜ் ரசிகன் என்ற முறையில் பெருமையாகவும் இருந்தது. நன்றி!
மும்தாஜின் இந்த நற்பண்பும் அக்கறையும் பாராட்டி எழுதி உள்ளீர்கள். ஆனால் இந்த நற்பண்புகள் அனைத்து துறையினரிடமும் உள்ளதே. ஏன் இதற்கு மட்டும் ஒவர் ரியாக்ஷன்?
அதிலும் பராட்டப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், சில நடிகைகள் இப்படி உதவி செய்துவிட்டு ஊடகங்கள் மூலம் விளம்பரம் தேடிக்கொள்வார்கள். ஆனால் மும்தாஜ் அவர்கள் எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் காதோடு காது வைத்தது போல் செய்யும் இத்தகைய செயல்கள் மிகவும் மெச்சத்தக்கது.
சிறந்த, அவசியமான பதிவு. மும்தாஜின் தமிழ் பற்றும் ஆர்வமும் தான் உலக அறிந்த விசயம் ஆயிற்றே.
உண்மையான தமிழ் ஆர்வம் கொண்டிருக்கும் வேறு சில நடிகைகள் யாராவது சொல்லுங்கள். மேலும் அவர் அமெரிக்கா தொலைபேசியில் கூப்பிட்டு எப்படி அவர்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டது உங்களுக்கு பெரிய விசயமாக தெரியவில்லையா? நல்லவற்றை பாராட்டலாம் அல்லவா? அதற்கு நடிகன், கலைஞன் போன்ற பேதம் இல்லையே. மேலும், மும்தாஜ் ஒரு கனவுக்கன்னி என்பதால் கூடுதல் கவணம். அவ்வளவே.
மும்தாஜிடம் பேசியது ஓர் பில்டப்பா? அப்படியே வைத்து கொள்ளுங்கள், இதில் மகிழ்ச்சி அடைவதில் தவறு ஏதும் இல்லேயே! மும்தாஜ் என்னுடைய செல் பேசியில் கூப்பிட்டது மனதிற்கு நிச்சயம் மகிழ்சியை தருகிறது. மும்தாஜ் நிறைய உதவிகள் செய்து வந்தாலும் இது நான் நேரிடையாக பார்த்தது. அதனை பதிய வைத்தேன்.
ஆமாம்..ஒரு நெருங்கிய நண்பருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் இன்னொருவரிடம் கலந்தாலோசிப்பது சகஜம் தானே.. இதில் தமிழார்வம் எங்க வந்தது? இதுவே நான் TNEB யில் வேலை பார்க்கிற ஒருத்தருக்கு உதவினால் அது மின்னார்வம் ஆகுமா? Bank-ல வேலை பார்க்கிறவருக்கு உதவினால் அது வங்கியார்வம் ஆகுமா? புரியலையே.. அப்புறம் தமிழ்ப் பேராசிரியரிடம் தமிழ் பேசாமல் இந்தியா பேசுவாங்க? இதுலயும் எங்கேயும் தமிழார்வம்? தெரியலையே.. அவங்க தொழிலுக்குத் தேவைப்படுது.. பேசுறாங்க.. எதுக்கு இப்படி ஓவரா உணர்ச்சிவசப் படுறீங்க?
ஒரு பெரிய நடிகை தமிழ் அறிஞர்களிடம் நெருக்கமாக இருப்பதே பாராட்டப்பட வேண்டிய செய்தி. அதிலும் ஒருவர் உடல்நலம் குன்றி சரியாக மருத்துவம் பார்த்துக்கொள்ள மாட்டேன் என்று சொல்லும் போது அவர்களின் இன்னொரு நண்பரை தொடர்பு கொண்டு எப்படி இவரை மருத்துவம் பார்த்துக்கொள்ள வைப்பது என்று ஆலோசிக்கிறார். இதை பகிர்ந்துகொள்ளாமல் விட்டிருந்தால் தான் தவறு.
உங்கள் கட்டுரை படித்தவுடன் என் இதயத்தில் மும்தாஜ் ஒரு படி மேலே சென்று விட்டார்.
உங்கள் கருத்தில் சிறுபிள்ளைத்தனமும் மும்தாஜ் மேல் உள்ள வெறுப்பும் தான் தெரிகிறது. பரமசிவம் மும்தாஜின் நண்பராம். அதனால் உதவி செய்தாராம். பரமசிவம் மும்தாஜ்க்கு எப்படி நண்பரானார்? மும்தாஜின் தமிழார்வமும் தமிழறிஞர்களை மதிக்கும் குணமும் தேடலும் அவர்களை நண்பர்களாக்கியதே தவிர வேறென்ன? அப்படிப்பட்ட தேடலும் மொழியறிவும் இங்கு வேறு யாருக்கு உண்டு? மும்தாஜிடம் இருப்பதில் ஒரு தூசி கூட கிடையாது.
மும்தாஜ் இதை காட்டிலும் பெரிய விஷயங்கள் பண்ணி இருப்பதை என்னுடைய பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளேன். நான் இதை குறை கூறும் நோக்கத்தோடு அல்லது நக்கல் பண்ணும் நோக்கத்தோடு எழுதவில்லை. ஆனால் ஒரு பிரபலத்தோடு நேரில் விஷயம் ஒரு சகபதிவரை சற்றே தடுமாற வைத்து விட்டதோ என்று எண்ணத்தில் தான் "ஒவர் ரியாக்ஷன்" என்று நான் பயன்படுத்தினேன். எந்த காழ்ப்புணர்வும் இல்லை. மீண்டும் சொல்கிறேன். தவறாக பட்டால் தயவு செய்து மன்னித்து விடுங்கள்.
நல்ல பதிவு. சில நடிகைகளுக்கு 'ஆன்மீகத்' தாகமெடுத்து மலையேறுவதும், முக்கியமாக மருதமலை. மதிப்பிற்குரியதாகவும், வலைப்பதிவில் பகிர்ந்து கொள்ளக்கூடிய தகுதியோடும் இருக்கும்போது, மும்தாஜ்க்கு தமிழ்த் தாகமெடுப்பதும் அதனை யாரால் போக்கிக் கொள்கிறாரோஅந்த அறிவாளி உடல்நலம் குன்றும்போது அக்கறைப்படுவதும் ஏன் மதிப்பிற்குரியதாகவோ, பகிர்ந்து கொள்ளக் கூடியதாகவோ இருக்கக் கூடாது? எனக்கும் மும்தாஜ் தொலைபேசி எண்ணை கொடுத்துவிடுங்கள்.
4 Comments:
ரொம்ப குசும்பைய்யா உமக்கு...
அன்பின் பாலமுருகன்,
உங்களை மும்தாஜ் உங்கள் கைத் தொலைபேசியில் அழைத்தது எனக்குப் புல்லரிக்கிறதென்றால் பாருங்களேம்.
மும்தாஜின் தமிழ்த் தாகம் பாராட்டுதற்குரியது. விரைவில் அவருக்கு ஒரு தமிழ் இளநீரோ ஒரு தமிழ் பெப்சியோ குடித்து இளைப்பாறச்சொல்லுங்கள்.
இதை அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநில அனைத்து தமிழ் நண்பர்கள் சார்பாக நான் கேட்டுக் கொண்டதாகச் சொல்லுங்கள்...
ஆமாம்.. அந்த செல்போனை எனக்கு விலைக்குக் கொடுக்கும் ஆர்வம் ஏதாவது உண்டா?
சீமாச்சு
கமலஹாஸனின் தமிழ் ஆர்வம் என்றொரு பதிவு வந்தது..இப்பொழுது
மும்தாஜின் தமிழ் ஆர்வம்!இர்ண்டு பதிவுகளிலும் கம்ல்ஹாஸன்,மும்தாஜ்
என்று பெயர்கள்மட்டுமே மாறியுள்ளன
"தீபத்தை வைத்துக் கொண்டு திருக்குறளும் படிக்கலாம்.............".எனும் திரைப்பாட்டு நினைவுக்கு வருகின்றது
மும்தாஜ்-க்கு தமிழார்வம் இருக்கக்கூடாது என்று யார் சொன்னது?
சிம்ரன்கூட "ரெட்டே இலேக்கு ஓட் போட்ங்க" என்று டமிளில் பேசியபோது இவர் பேசினால் தவறில்லை.
Post a Comment
<< Home