Tuesday, July 24, 2007

தருமி தாத்தாவும் தமிழ் செல்வியும்

நாளை இதே நேரத்தில் இந்தியாவின் ஜனாதிபதியாக ஒரு பெண்மணி இருப்பார். மாதர் குல மாணிக்கங்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்திருப்பார்கள். குற்றச்சாட்டுகள் நிறைய இருந்தாலும் எப்படியாவது பிரதீபா பாட்டிலை ஜனாதிபதியாக்கியே தீருவது என்ற வறட்டு பிடிவாதத்திற்கு வெற்றி கிடைத்துவிட்டது. அப்துல் கலாம் கோமாளியாகிவிட்டார்.

பிரதீபாவை விட்டால் வேறு நல்ல பெண்மனிகளே இல்லையா? யாரிடம் போய் கேட்பது. கேட்டால் பெண்களுக்கு எதிரானவர்கள் என்று சொல்லிவிடுவார்கள். பாரதிய ஜனதா கட்சியினரும் பயந்து போய் அடுத்த அஸ்திவரத்தை விட்டிருக்கிறார்கள். துணை ஜனாதிபதிக்கு நஜ்மா ஹெப்துல்ல போட்டியிடுகிறார். இப்போது காங்கிரஸ் கட்சி என்ன செய்யப்போகிறது?

அயோக்கியனின் கடைசி புகலிடம் அரசியல் என்பது போல விதவைகள், விவகாரத்து பெண்களுக்கு அரசியலை விட்டால் வேறுவழியில்லை. இரண்டு குழந்தைகளை பெற்று கணவரோடு ஒழுங்காக வாழ்க்கையை நடத்தும் பெண்களே இந்தியாவில் இல்லையா என்ற வெளிநாட்டினர் கேட்கும் நிலை வரப்போகிறது. அரசியலில் சோனியா, ஜெயலலிதா என்றால் சினிமாவில் ராதிகா, மனோரமா கும்பல். ரேவதி, சுகாசினி, குஷ்பு போன்ற பெண்கள்தான் தமிழ்நாட்டில் பெண்மணிகள்.

இதை பற்றியெல்லாம் வலைப்பதிவு செய்ய வந்திருக்கும் மாதர் குல திலகங்கள் கவலைப்படவில்லை. பிரதீபா பாட்டீலுக்கு தங்களது ஆதரவு உண்டா என்பதை கூட யாரும் எழுதவில்லை. ஆனால் தமிழ் செல்வி பற்றிய விவாதங்களும் குழாயடி சண்டைகளும் தொடருகின்றன. சினிமா மாயை என்று பக்கம் பக்கமாக எழுதுபவர்கள்தான் தமிழ் செல்வி என்னும் திரைப்பட பாத்திரத்தை கையில் வைத்துக்கொண்டு ஆராய்ந்து பதிவுகள் எழுதி கும்மியடிக்கின்றார்கள். இதில் உச்சகட்ட காமெடியும் உண்டு. சிவாஜி படத்தில் ஆணாக இருந்து பெண்ணாக மாறிய பெண்ணை பற்றி வரும் வசனத்தை கண்டித்து ஒரு சமூக ஆர்வலர் போர்க்கொடி தூக்கியதுதான். ஒன்பதை ஒன்பது என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வதாம்?

நான்கு பேர் திரும்பி பார்ப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற வியாதி பெண்ணீயவியாதிகளிடமிருந்து வலைப்பதிவர்களுக்கும் வந்துவிட்டது. இதுவரை உருப்படியாக என்ன செய்திருக்கிறோம் என்று இவர்களே மனசாட்சியை கேட்டு எழுதினால் நன்றாக இருக்கும். இவர்களுக்கு அதை சொல்வதற்கு அருகதை இருக்கிறதா என்று படிப்பவர்கள் மனதுக்குள் கேள்வி கேட்டுக்கொண்டே அடுத்த வலைப்பதிவை மேய வேண்டியதுதான். இதைத்தான் தருமி தாத்தா (அவரை பார்க்கும்போது எனக்கு தாத்தா நினைவுக்கு வருவார்) அருமையாக சொல்லியிருக்கிறார். எதை எங்கே வைக்க வேண்டுமோ அதை அங்கே வைக்கவேண்டும்.

2 Comments:

At 10:04 PM, Anonymous Anonymous said...

செத்துப்போன பெரிய சங்கரன் மூத்திரத்த குடிச்சு வளர்ந்தவனாடா நீயி.

 
At 11:06 PM, Anonymous Anonymous said...

/அரசியலில் சோனியா, ஜெயலலிதா என்றால் சினிமாவில் ராதிகா, மனோரமா கும்பல். ரேவதி, சுகாசினி, குஷ்பு போன்ற பெண்கள்தான் தமிழ்நாட்டில் பெண்மணிகள்.//

விடாக்கண்டன் அய்யா,

புரட்சி கவிதை எழுதும் கனிமொழியையும்,திராவிட புரட்சி சிந்தனையாளி ராதிகா செல்வி அம்மாவை மறந்துட்டீங்களே?

 

Post a Comment

<< Home