பாமரன் மாமா பதில் சொல்வாரா?
நானும் எவ்வளவோ பிளாக் எழுதிப் பார்த்துவிட்டேன். யாரும் நான் எழுதியதை பத்திரிக்கைகளுக்கு சிபாரிசு செய்ததில்லை. பாமரன் மாமா (யாரும் தவறாக நினைக்க வேண்டாம்!. பாமரன் வயதில், அவரைப் போலவே தாடி வைத்த தோற்றத்தில் எனக்கொரு மாமா உண்டு) எனக்கு உதவினால் சந்தோஷப்படுவேன்.
சிவாஜி வெற்றிக்கு பின்னர் லதா ரஜினிகாந்த் திருந்தி ஏழைகளுக்கு காசு எதுவும் வாங்கிக்கொள்ளாமல் ஆசிரமத்தில் இடம் கொடுப்பதாக வந்த செய்தியைக் கேட்டு நிறைய பேர் உண்மையாகவே மனம் திருந்தி ஏழைகளுக்கு இலசமாக நிறைய அள்ளி அள்ளி கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களில் சிலரை மட்டும் இங்கே பார்க்கலாம்.
முதல்வர் கருணாநிதி, சன் டிவியிலிருந்து விலகிய பங்கையும் முதல் மனைவி தயாளு அம்மாள் பேரில் இருக்கும் 14 கோடி வங்கிக்கணக்கையும் இரண்டாவது மனைவி ராஜாத்தி அம்மாள் பெயரில் இருக்கும் 125 பவுன் நகைகளையும் வைத்து இலவச கல்விக்காக அண்ணா பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்துவிட்டாராம்.
அடுத்த முதல்வரான ஸ்டாலின், தொண்டர்கள் தந்த டீ காசை வைத்தும், மகன் உதயநிதி, சினிமா பிஸினெஸ், டிஸ்கொத்தே நடத்திய வகையில் கிடைத்த 45 லட்ச ரூபாயை வைத்து உதய நிதி பெயரில் பள்ளிக்கூடம் ஆரம்பிக்கிறாராம்.
மதுரையின் முதல்வரான அழகிரி, கஷ்டப்பட்டு சம்பாதித்த பொருளையெல்லாம் அடகு வைத்து தங்கை கனிமொழியின் பெயரால் பல்கலைக்கழகம் ஆரம்பிக்க இருக்கிறாராம்
அம்மா ஜெயலலிதாவோ பாட்டனார் காலத்தை நகைகளை விற்றும், போயஸ் தோட்டத்து வீட்டை வாடகைக்கு விற்றும் எம்.ஜி.ஆர் பெயரில் இன்னொரு பல்கலைக்கழகம் ஆரம்பிக்க ஏற்பாடுகள் நடக்கிறதாம்.
மருத்துவர் ராமதாஸ் ஒரு படி மேலே போய், இடஒதுக்கீட்டு கேட்டு மரத்தை வெட்டி சாய்த்து மறியல் நடத்தி தியாகிகளான வன்னியர் குல திலகங்களின் பெயரில் திண்டிவனத்தில் ஒரு கல்லூரி ஆரம்பிக்கிறாராம். அதற்கான வசூல் வேட்டை மூன்று வருடங்களாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. ராமதாஸ் திண்டிவனத்தில் கிளினிக் வைத்திருந்த காலத்திலேயே பெரிய பணக்காராம். அப்போதே வன்னியர்களுக்காக கல்லூரி ஆரம்பிக்க இருந்தாராம்.
விஜயகாந்த், லதா ரஜினிகாந்தின் செயல்பாட்டை பார்த்து, தன்னுடைய கல்லூரியில் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் உள்ளே நுழைந்து வகுப்பில் உட்கார்ந்து கொள்ளலாம் என்று அறிவித்து உள்ளாராம்.
திருமாவளவன், சினிமாவில் நடிப்பதால் வரும் சம்பளத்தை அப்படியே தலித் குழந்தைகளின் கல்விச் செலவுக்காக அர்ப்பணிக்க போகிறாராம். கூடிய விரைவில் நடக்கவிருக்கும் திருமாவளவனின் திருமணத்தில் வரும் மொய் தொகை கூட கல்விக்குத்தான் போய் சேரப்போகிறதாம்.
அரசியல்வாதிகளை மட்டுமல்ல, தமிழினத்தின் நாளைய எதிர்காலத்தை பற்றி மட்டுமே சிந்திக்கும் புதிய கலாசாரம், தீக்கதிர், பறை, பட்டறை, உரி, மட்டை, மரம் வெட்டி, கோடாரி, திரும்பிப்பார், நிமிர்ந்து நட போன்ற பொதுமக்களால் விரும்பி வாங்கப்படும் இதழ்கள் கூட ஒன்றோடு ஒன்று கைகுலுக்கி இனி அரசியல் பற்றிய கட்டுரைகளே இடம்பெறாது என்றும் தமிழ்நாட்டில் கன்னடக்காரர்களின் கையில் சிக்கியிருக்கும் கல்வியை கைப்பற்றி தமிழனை காப்பாற்றுவதே தன்னுடைய கடமை என்றும் உறுதி மொழி எடுத்திருக்கிறார்களாம்.
இதை விட முக்கியமான விஷயம். தமிழ்நாட்டில் கல்வியை மேம்படுத்துவதற்காக உலகெங்கும் இருக்கும் ஈழத்தமிழர்கள் உண்டியல் குலுக்கி பணம் சேர்த்து தமிழ்க் குழந்தைகள் தமிழில் மட்டுமே படிப்பதற்காக பணம் அனுப்ப இருக்கிறார்களாம்.
நடப்பதெல்லாம் நல்லதற்கே! பச்சைத் தமிழன் என்று மார் தட்டுவோம், பாரினை நம்பக்கம் திரும்பி பார்க்க வைப்போம்!
7 Comments:
வணக்கம் விடாக்கண்டன்...நன்றாக இருக்கிறது உங்கள் கட்டுரை தொடர்ந்து எழுதுங்கள்...வாழ்த்துக்கள். நிறைய அன்புடன் வீரமணி
அவங்க ரஜினியைக் கையாக் காம்பிச்சா பதி சொல்லாம நீ மட்டும் யோக்கியமான்னு கேக்கற கைகாட்டும் பழக்கம் உங்களையும் விடவில்லையா? பதில் தெரியவில்லை என்றால்எதிர்கேள்வி! தமிழன் ரஜினியைவிட கிறுக்கன்!
ஓசை செல்லாதான் முதலில் கேள்வியை எழுப்பியவர். அவர் கேட்ட போது "அட நல்லயிருக்கே" என்று தோன்றியது.
அதைத் தொடர்ந்து நீங்கள் மற்றவர்களுக்கும் அதே கேள்வியை கேட்டிருப்பது "அடடா இதுவும் நல்லாயிருக்கே" என்றே தோன்றுகிறது.
கேள்விகளால் நிறைந்த இந்த உலகத்தில் உங்களின் இந்தக் கேள்வியும் சேர்த்து வைக்கப்படும்.
விடை ????
அருமை...பாமரன் சில சமயங்களில் 'காமெடி பண்ணுகிறேன்' என்று சில விசயங்களை சொதப்பிவிடுவார்.
விகடனில் கூட பாஸ்கியும்,பாலாஜியும்(பாலாஜிதானே?) பண்ணிய'தமிங்கலம்'
பாணி கிரிகெட் வர்ணனையை குறை கூறி இருந்தார். இதில் மட்டுமா தமிழை கொலைசெய்கிறார்கள்? எல்லா சேனல்களிலும்,எல்லா நிகழ்ச்சிகளிலும் தான் நடைபெறுகிறது. எத்தனை அரசியல்வாதிகள்,திரைப்படத்துறையினர் வாயைத் திறந்தால் 'தமிங்கலம்'தான் வருகிறது. நம் மண்ணின் மைந்தன், கிராமத்து புயல் பாரதிராஜா வாயைத் திறந்தால் வெள்ளைகாரன் கெட்டான் போங்கள்...ஏன் நம் இசைஞானியின் செல்ல மகன் யுவன் சங்கர் ராஜா பேசத் தொடங்கினால் இவர் வெளிநாட்டுகாரரோ என்ற சந்தேகம் வந்துவிடுகிறது. இவர்களை போன்றவர்களையும் பாமரன் கண்டித்தால் பாராட்டலாம்.
பாமரன் ஏன் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் பாஸ்கியை குறி வைக்கிறார் என்பதை ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது.
//அவங்க ரஜினியைக் கையாக் காம்பிச்சா பதி சொல்லாம நீ மட்டும் யோக்கியமான்னு கேக்கற கைகாட்டும் பழக்கம் உங்களையும் விடவில்லையா? பதில் தெரியவில்லை என்றால்எதிர்கேள்வி! தமிழன் ரஜினியைவிட கிறுக்கன்!//
எதிர்க் கேள்விக்கு பதில் உண்டா இல்லையா?
இதற்கு பதில் இல்லை என்றால் கேள்விக்கும் பதில் இல்லை. :)
அனானி முன்னா
என்ன பாமரன் அய்யா தமிழர் மாமாவா?
அந்த பட்டம் கன்னட தாடிக்காரருக்கு திராவிட சிங்கங்களால் கொடுக்கப்பட்டது.இப்போ அவர் இல்லை என்பதால் பாமரன் அய்யாவுக்கு அந்த பட்டம் கொடுப்பது சரியல்ல.
பார்ப்பனையும் பாம்பையும் கண்டால் பார்ப்பனை அடிக்கிற ஜாதி பாமரனின் ஜாதி. விகடன் போன்ற ஐயங்கார் பத்திரிக்கையில எழுதுவார். வயிறுன்னு ஒன்ணு இருக்குதில்லே?
இலவமாக பகுத்தறிவு போதிக்க வீரமணி மாமா ஏதும் முடிவெடுக்கவில்லையா?
Post a Comment
<< Home