Tuesday, July 24, 2007

தருமி தாத்தாவும் தமிழ் செல்வியும்

நாளை இதே நேரத்தில் இந்தியாவின் ஜனாதிபதியாக ஒரு பெண்மணி இருப்பார். மாதர் குல மாணிக்கங்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்திருப்பார்கள். குற்றச்சாட்டுகள் நிறைய இருந்தாலும் எப்படியாவது பிரதீபா பாட்டிலை ஜனாதிபதியாக்கியே தீருவது என்ற வறட்டு பிடிவாதத்திற்கு வெற்றி கிடைத்துவிட்டது. அப்துல் கலாம் கோமாளியாகிவிட்டார்.

பிரதீபாவை விட்டால் வேறு நல்ல பெண்மனிகளே இல்லையா? யாரிடம் போய் கேட்பது. கேட்டால் பெண்களுக்கு எதிரானவர்கள் என்று சொல்லிவிடுவார்கள். பாரதிய ஜனதா கட்சியினரும் பயந்து போய் அடுத்த அஸ்திவரத்தை விட்டிருக்கிறார்கள். துணை ஜனாதிபதிக்கு நஜ்மா ஹெப்துல்ல போட்டியிடுகிறார். இப்போது காங்கிரஸ் கட்சி என்ன செய்யப்போகிறது?

அயோக்கியனின் கடைசி புகலிடம் அரசியல் என்பது போல விதவைகள், விவகாரத்து பெண்களுக்கு அரசியலை விட்டால் வேறுவழியில்லை. இரண்டு குழந்தைகளை பெற்று கணவரோடு ஒழுங்காக வாழ்க்கையை நடத்தும் பெண்களே இந்தியாவில் இல்லையா என்ற வெளிநாட்டினர் கேட்கும் நிலை வரப்போகிறது. அரசியலில் சோனியா, ஜெயலலிதா என்றால் சினிமாவில் ராதிகா, மனோரமா கும்பல். ரேவதி, சுகாசினி, குஷ்பு போன்ற பெண்கள்தான் தமிழ்நாட்டில் பெண்மணிகள்.

இதை பற்றியெல்லாம் வலைப்பதிவு செய்ய வந்திருக்கும் மாதர் குல திலகங்கள் கவலைப்படவில்லை. பிரதீபா பாட்டீலுக்கு தங்களது ஆதரவு உண்டா என்பதை கூட யாரும் எழுதவில்லை. ஆனால் தமிழ் செல்வி பற்றிய விவாதங்களும் குழாயடி சண்டைகளும் தொடருகின்றன. சினிமா மாயை என்று பக்கம் பக்கமாக எழுதுபவர்கள்தான் தமிழ் செல்வி என்னும் திரைப்பட பாத்திரத்தை கையில் வைத்துக்கொண்டு ஆராய்ந்து பதிவுகள் எழுதி கும்மியடிக்கின்றார்கள். இதில் உச்சகட்ட காமெடியும் உண்டு. சிவாஜி படத்தில் ஆணாக இருந்து பெண்ணாக மாறிய பெண்ணை பற்றி வரும் வசனத்தை கண்டித்து ஒரு சமூக ஆர்வலர் போர்க்கொடி தூக்கியதுதான். ஒன்பதை ஒன்பது என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வதாம்?

நான்கு பேர் திரும்பி பார்ப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற வியாதி பெண்ணீயவியாதிகளிடமிருந்து வலைப்பதிவர்களுக்கும் வந்துவிட்டது. இதுவரை உருப்படியாக என்ன செய்திருக்கிறோம் என்று இவர்களே மனசாட்சியை கேட்டு எழுதினால் நன்றாக இருக்கும். இவர்களுக்கு அதை சொல்வதற்கு அருகதை இருக்கிறதா என்று படிப்பவர்கள் மனதுக்குள் கேள்வி கேட்டுக்கொண்டே அடுத்த வலைப்பதிவை மேய வேண்டியதுதான். இதைத்தான் தருமி தாத்தா (அவரை பார்க்கும்போது எனக்கு தாத்தா நினைவுக்கு வருவார்) அருமையாக சொல்லியிருக்கிறார். எதை எங்கே வைக்க வேண்டுமோ அதை அங்கே வைக்கவேண்டும்.

Thursday, July 12, 2007

பாமரன் மாமா பதில் சொல்வாரா?

நானும் எவ்வளவோ பிளாக் எழுதிப் பார்த்துவிட்டேன். யாரும் நான் எழுதியதை பத்திரிக்கைகளுக்கு சிபாரிசு செய்ததில்லை. பாமரன் மாமா (யாரும் தவறாக நினைக்க வேண்டாம்!. பாமரன் வயதில், அவரைப் போலவே தாடி வைத்த தோற்றத்தில் எனக்கொரு மாமா உண்டு) எனக்கு உதவினால் சந்தோஷப்படுவேன்.

சிவாஜி வெற்றிக்கு பின்னர் லதா ரஜினிகாந்த் திருந்தி ஏழைகளுக்கு காசு எதுவும் வாங்கிக்கொள்ளாமல் ஆசிரமத்தில் இடம் கொடுப்பதாக வந்த செய்தியைக் கேட்டு நிறைய பேர் உண்மையாகவே மனம் திருந்தி ஏழைகளுக்கு இலசமாக நிறைய அள்ளி அள்ளி கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களில் சிலரை மட்டும் இங்கே பார்க்கலாம்.

முதல்வர் கருணாநிதி, சன் டிவியிலிருந்து விலகிய பங்கையும் முதல் மனைவி தயாளு அம்மாள் பேரில் இருக்கும் 14 கோடி வங்கிக்கணக்கையும் இரண்டாவது மனைவி ராஜாத்தி அம்மாள் பெயரில் இருக்கும் 125 பவுன் நகைகளையும் வைத்து இலவச கல்விக்காக அண்ணா பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்துவிட்டாராம்.

அடுத்த முதல்வரான ஸ்டாலின், தொண்டர்கள் தந்த டீ காசை வைத்தும், மகன் உதயநிதி, சினிமா பிஸினெஸ், டிஸ்கொத்தே நடத்திய வகையில் கிடைத்த 45 லட்ச ரூபாயை வைத்து உதய நிதி பெயரில் பள்ளிக்கூடம் ஆரம்பிக்கிறாராம்.

மதுரையின் முதல்வரான அழகிரி, கஷ்டப்பட்டு சம்பாதித்த பொருளையெல்லாம் அடகு வைத்து தங்கை கனிமொழியின் பெயரால் பல்கலைக்கழகம் ஆரம்பிக்க இருக்கிறாராம்

அம்மா ஜெயலலிதாவோ பாட்டனார் காலத்தை நகைகளை விற்றும், போயஸ் தோட்டத்து வீட்டை வாடகைக்கு விற்றும் எம்.ஜி.ஆர் பெயரில் இன்னொரு பல்கலைக்கழகம் ஆரம்பிக்க ஏற்பாடுகள் நடக்கிறதாம்.

மருத்துவர் ராமதாஸ் ஒரு படி மேலே போய், இடஒதுக்கீட்டு கேட்டு மரத்தை வெட்டி சாய்த்து மறியல் நடத்தி தியாகிகளான வன்னியர் குல திலகங்களின் பெயரில் திண்டிவனத்தில் ஒரு கல்லூரி ஆரம்பிக்கிறாராம். அதற்கான வசூல் வேட்டை மூன்று வருடங்களாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. ராமதாஸ் திண்டிவனத்தில் கிளினிக் வைத்திருந்த காலத்திலேயே பெரிய பணக்காராம். அப்போதே வன்னியர்களுக்காக கல்லூரி ஆரம்பிக்க இருந்தாராம்.

விஜயகாந்த், லதா ரஜினிகாந்தின் செயல்பாட்டை பார்த்து, தன்னுடைய கல்லூரியில் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் உள்ளே நுழைந்து வகுப்பில் உட்கார்ந்து கொள்ளலாம் என்று அறிவித்து உள்ளாராம்.

திருமாவளவன், சினிமாவில் நடிப்பதால் வரும் சம்பளத்தை அப்படியே தலித் குழந்தைகளின் கல்விச் செலவுக்காக அர்ப்பணிக்க போகிறாராம். கூடிய விரைவில் நடக்கவிருக்கும் திருமாவளவனின் திருமணத்தில் வரும் மொய் தொகை கூட கல்விக்குத்தான் போய் சேரப்போகிறதாம்.

அரசியல்வாதிகளை மட்டுமல்ல, தமிழினத்தின் நாளைய எதிர்காலத்தை பற்றி மட்டுமே சிந்திக்கும் புதிய கலாசாரம், தீக்கதிர், பறை, பட்டறை, உரி, மட்டை, மரம் வெட்டி, கோடாரி, திரும்பிப்பார், நிமிர்ந்து நட போன்ற பொதுமக்களால் விரும்பி வாங்கப்படும் இதழ்கள் கூட ஒன்றோடு ஒன்று கைகுலுக்கி இனி அரசியல் பற்றிய கட்டுரைகளே இடம்பெறாது என்றும் தமிழ்நாட்டில் கன்னடக்காரர்களின் கையில் சிக்கியிருக்கும் கல்வியை கைப்பற்றி தமிழனை காப்பாற்றுவதே தன்னுடைய கடமை என்றும் உறுதி மொழி எடுத்திருக்கிறார்களாம்.

இதை விட முக்கியமான விஷயம். தமிழ்நாட்டில் கல்வியை மேம்படுத்துவதற்காக உலகெங்கும் இருக்கும் ஈழத்தமிழர்கள் உண்டியல் குலுக்கி பணம் சேர்த்து தமிழ்க் குழந்தைகள் தமிழில் மட்டுமே படிப்பதற்காக பணம் அனுப்ப இருக்கிறார்களாம்.

நடப்பதெல்லாம் நல்லதற்கே! பச்சைத் தமிழன் என்று மார் தட்டுவோம், பாரினை நம்பக்கம் திரும்பி பார்க்க வைப்போம்!

Monday, July 02, 2007

சிகாகோவில் சிவாஜி!

சிகாகோவில் உள்ள தமிழ்நாடு அறக்கட்டளக்கு நிதி சேர்ப்பதற்காக சிவாஜி திரைப்படம் திரையிடப்படுகிறது. யுஎஸ்ஏ மற்றும் பரத் கிரியேஷன்ஸ் இணைந்து இந்த நல நிதிக் காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இதில் வசூலாகும் நிதி முழுவதும் தமிழ்நாடு அறக்கட்டளைக்கு அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளது. இந்த அமைப்பு தமிழகத்தில் உள்ள மன நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள், முதியவர்கள், படிப்புதவி, பள்ளிகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு தொண்டுகளில் ஈடுபட்டுள்ளது.

தங்களது அமைப்புக்கு உதவுவதற்காக சிவாஜியின் உதவியை தமிழ்நாடு அறக்கட்டளை நாடியது. இதையடுத்து சிவாஜி சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நல்லதுக்காகவும் சிவாஜி பயன்படுகிறது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மறைமுகமாக உதவிக் கரம் நீட்டுகிறார் என்பதற்காக சந்தோஷப்படலாம்.

இதற்கிடையே சிகாகோவாவில் தொடர்ந்து சிவாஜி வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து 3 வாரங்களாக ஓடிய முதல் தமிழ்ப் படம் என்பது சிகாகோவில் சிவாஜி படைத்துள்ள புதிய சாதனையாகும்.

எல்லா இடத்திலும் வசூல் சாதனை படைத்து வரும் சிவாஜி, கேரளாவிலும் வசூலில் பின்னி எடுத்து வருகிறதாம். 2வது வாரமாக கேரளாவில் சிவாஜி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த இரு வாரங்களிலும் சிவாஜியின் வசூல் ரூ. 4 கோடியாம்!

கேரள விநியோகஸ்தரான ஜானி சாகரிகா சிவாஜியை ரூ. 3.2 கோடி கொடுத்து வாங்கினார். அந்தத் தொகையை இரண்டே வாரங்களில் திருப்பி எடுத்து லாபமும் பார்த்து விட்டார்.

ஆரம்பத்தில் 86 தியேட்டர்களில் சிவாஜி திரையிடப்பட்டிருந்தது. இது கேரள திரையுலகில் புதிய சாதனை. மலையாளப் படம் கூட இந்த அளவுக்கு அதிகமான தியேட்டர்களில் திரையிடப்பட்டதில்லையாம். ஆனால் தற்போது 60 தியேட்டர்களாக சிவாஜி குறைந்து விட்டதாம்.

திருவனந்தபுரத்தில் இன்னும் படு கூட்டமாக இருக்கிறதாம். இங்கு மட்டும் ரூ.20லட்சம் லாபத்தைப் பார்த்துள்ளதாம் சிவாஜி. கேரளாவில் ரஜினி படத்தை குடும்பம் குடும்பமாக பார்க்க வருகிறார்களாம் ரசிகர்கள்.

கொச்சியில், இந்தப் படம் 100 சதவீத லாபத்தை விநியோகஸ்தர் ஜானி சாகரிகாவுக்கு கொடுத்துள்ளதாம்.

மலையாள திரையுலகின் டாப் 5 படங்களில் சிவாஜிக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. படம் வெளியான நாள் முதலே முதலிடத்தில்தான் இருக்கிறதாம் சிவாஜி.

முன்பு தளபதிக்கு இந்தப் பெருமை கிடைத்தது. ஆனால் அதில் மம்முட்டி நடித்திருந்தார் என்பதால் மலையாளப் பாசத்தில் அப்படத்துக்கு முதலிடம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் முழுக்க முழுக்க ஒரு தமிழ்ப் படத்திற்கு முதலிடம் கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

கூல், கூல் ...!