Wednesday, July 27, 2005

எங்கேயோ கேட்ட குரல் - 3

" சூப்பர் தல சூப்பர்..* எப்படிய்யா உனக்கு இப்படியெல்லாம் தோணுது..* சொம்மா பூந்து கலாச்சிட்ட நைனா..* cool man..* wow really superb...* பிச்சிப்பூட்டப்பு..* அண்ணாச்சி, பதிவுன்னா அது இதூல்லா... * உங்களின் கருத்துக்களோடு உடன்படுகிறேன்.* இப்பதிவை படித்தவுடன் எனக்கும் இதேதான் தோன்றியது...* இதுபோன்ற பதிவுகள் வலைப்பதிவுகளை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்கிறது, பாராட்டுக்கள் * இவ்வளவு நேரம் இதுக்கு செலவழிக்கணுமா.... இதெல்லாம் இன்னாபா?"

"டேய்... போடா... போய் உருப்படியா ஏதாவது வேலை இருந்தா பாரு.."

Wednesday, July 20, 2005

எங்கேயோ கேட்ட குரல் - 2

"வைரமுத்துவை பாரதியார், பாரதிதாசன் ரேஞ்சுக்கு புகழ்ந்து தள்ளியிருக்காரே பாரதிராஜா, பார்த்தியா?"

"கண்ணதாசன் செத்துப்போயிட்டாரு. வாலிக்கோ விவஸ்தை இல்லை. அப்ப பா.விஜய்யை பாராட்டின கலைஞருக்கு பன்சு குடுக்குறாரோ?"