Tuesday, June 20, 2006

இது காமெடி

பெரிய பொறுப்பு தருகின்றனர், சிறப் பாக வழிநடத்த வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், சத்யமூர்த்தி பவனுக்குள் நுழைந்தபோது தான், நாம் நினைப்பது போல அவ்வளவு எளிதான விஷயமல்ல என்று நினைக்கத் தோன்றியது. காரணம், அந்தளவுக்கு கோஷ்டி அரசியல். பொறுப்பை ஏற்றுக் கொண்ட சமயத்தில் எனக்கு கிடைத்த அனுபவங்களை விவரித்தால்... பலரின் "முகமூடி'கள், அவர்களின் "இமேஜ்'கள் கிழிந்துவிடும்

- தமிழக காங்., தலைவர் கிருஷ்ணசாமி

Friday, June 02, 2006

இதுதாண்டா காமெடி

தமிழர்களின் ஒற்றுமைக்காகவும், ஜாதிய மோதலற்ற இணக்கமான சூழல் உருவாவதற்காகவும் அ.தி.மு.க., அரசு எடுத்த முயற்சிகளை நான் பாராட்டினேன். அதனாலேயே அ.தி.மு.க., அரசு தொடர வேண்டும் என என் மனக் கருத்தை ஆழமாகப் பதிவு செய்தேன். கருணாநிதி பற்றியோ, அவர் தலைமையிலான கழகத்தைப் பற்றியோ தனிப்பட்ட ரீதியில் வசைபாடி இருக்கிறேனா? 96ம் ஆண்டு வரை தி.மு.க.,வுக்காக அரசியல் செய்திருக்கிறேன். அதற்காக அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தபோது என் மீது வழக்கா போட்டனர்? அது போல இப்போது தி.மு.க.,வும் என் மீது எந்தவித தடாலடிகளையும் செய்யாது...

- மதுரை ஆதீனம்

Thursday, June 01, 2006

ஆரம்பிச்சுட்டாங்க!

விஜயகாந்த் பெற்ற ஓட்டுகளைப் பற்றி நான் விரிவாகப் பேச விரும்பவில்லை. ஆனால், அவர் ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக 10 ஆயிரம் ஓட்டுகள் வாங்கி உள்ளார். இது சாமானிய விஷயம் கிடையாது. இது பலவற்றை உள்ளடக்கிய, ஒரு மகத்தான விஷயமாக கருதுகிறேன். நானே இதை எதிர்பார்க்கவில்லை. இது தனிப்பட்ட விஜயகாந்திற்கு கிடைத்த ஓட்டாக நினைக்கவில்லை. இந்த ஓட்டுகளுக்கு பல அர்த்தங்கள் உண்டு...

- மத்திய அமைச்சர் இளங்கோவன்